இந்தியா

ஜாமீன் கோரி நீதிபதியை மிரட்டிய வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்​றில் கைதான சுகேஷ் சந்திரசேகர், கான்​ஸ்​டபிள் மஞ்​சீத் என்​பவரின் செல்​போனைப் பயன்​படுத்தி டெல்லி சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி​யின் அதி​காரப்​பூர்வ தொலைபேசி எண்​ணுக்கு அழைத்​து, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யின் தனிச்​செய​லா​ளர் மற்​றும் நீதிபதி ‘கே.ஜே’ என ஆள்​மாறாட்​டம் செய்து உடனடி​யாக தனக்கு இடைக்​கால ஜாமீன் வழங்​கு​மாறு மிரட்​டி​யுள்​ளார்.

இதைத்​தொடர்ந்து நீதிபதி பூனம் சவுத்ரி உச்ச நீதி​மன்​றத்​தைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசா​ரித்த நிலை​யில் அது மோசடி​யான தொலைபேசி அழைப்பு என அறிந்து அது தொடர்பாக புகார் பதிவு செய்​தார்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்து வந்த டெல்லி திஸ் ஹசாரி நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிபதி ஹர்​ஷிதா மிஸ்ரா வழங்​கிய தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நீதிப​தியை மிரட்​டிய சுகேஷின் இந்த நடவடிக்​கை, அபத்​த​மானது. நீதி​மன்ற உத்​தர​வு​கள் நீதி​மன்ற அறை​யில்​தான் பிறப்​பிக்​கப்​படுமே தவிர, ரகசி​யத் தொலைபேசி அழைப்​பு​களில் அல்ல. இந்த வழக்​கில் முக்​கிய ஆதா​ர​மான செல்​போன், சிசிடிவி காட்​சிகளைச் சேகரிக்​கத் தவறிய டெல்லி காவல் துறை​யின் விசா​ரணை அலட்​சி​ய​மானது.

சுகேஷுக்கு செல்​போன் கொடுத்த கான்​ஸ்​டபிள் மஞ்​சீத் இந்த மோசடிக்கு உடந்​தை​யாக இருந்​திருக்​கலாம். அவர் மீது மீண்​டும் விசா​ரணை நடத்த வேண்டும். காவல் துறை​ விசா​ரணை​யில் பல குளறு​படிகள் இருந்​த​போ​தி​லும், அரசுத் தரப்பு சமர்ப்​பித்த ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் சுகேஷ் சந்​திரசேகர் குற்​றவாளி என்​பது சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. அவருக்​கான தண்​டனை விவரங்​கள் அறிவிக்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT