இந்தியா

அசாம் சுகோய் விமான விபத்தில் 2 பைலட் உயிரிழப்பு

ஒருவர் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அ​சாம் மாநிலத்​தில் சுகோய் போர் விமானம் விபத்​தில் சிக்​கிய​தில் 2 பைலட்​கள் உயி​ரிழந்​தனர்.

அசாம் மாநிலம் ஜோர்​ஹாட்​டில் உள்ள விமானப் ​படைத்தளத்​தில் இருந்து சுகோய் போர் விமானம் நேற்று முன்​தினம் பயிற்​சிக்​காக சென்​றது. இதில் பிளைட் லெப்​டினன்ட் பர்​வேஸ் துரக்​கர் (28), ஸ்கு​வார்​டர்ன் லீடர் அனுஜ் ஆகியோர் சென்​றனர்.

          

சிறிது நேரத்​தில் அந்த விமானத்​தின் தகவல் தொடர்பு துண்​டிக்​கப்​பட்​டது. விமானத்தை தேடிய போது, அசாம் மாநிலம் கார்பி அங்​கிலாங் பகு​தி​யில் நொறுங்கி கிடந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. மாய​மான பைலட்​களை தேடும் பணி தொடங்​கியது.

இந்​நிலை​யில் அந்த விமானத்​தில் சென்ற இரு பைலட்​களும் உயி​ரிழந்​த​தாக விமானப்​படை நேற்று அறி​வித்​தது. இவர்​களில் பர்​வேஸ் துரக்​கர் கடந்​தாண்டு நடை​பெற்ற ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் பங்​கேற்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. மகா​ராஷ்டிரா மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த பர்​வேஸ் 4 ஆண்​டு​களுக்கு முன்​பு​தான் வி​மானப்​படை​யில்​ சேர்ந்​தார்​.

SCROLL FOR NEXT