இந்தியா

செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: செல்போன் மோகத்​தில் சிக்​கி​யிருக்​கும் மாணவ, மாண​வியரை, ஆசிரியர்​கள் மீட்​டெடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

நாடு முழு​வதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த 82 ஆசிரியர்​களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு டெல்​லி​யில் நேற்று நல்​லாசிரியர் விருதுகளை வழங்​கி​னார். பின்​னர் விருது பெற்ற ஆசிரியர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:

இந்​தி​யா​வில் பாரம்​பரிய கூட்​டுக் குடும்​பங்​களின் எண்​ணிக்கை குறைந்து வரு​கிறது. இந்​தக் குறையைப் போக்க மாணவ, மாண​வியரின் வாழ்க்​கை​யில் ஆசிரியர்​கள் மிக முக்​கிய பங்​களிப்பை வழங்க வேண்​டும். குழந்​தைகளின் தனித்திறமை​களை வளர்க்க அவர்​களை ஊக்​குவிக்க வேண்​டும்.

பதின்​பருவ மாணவ, மாணவரிடையே போதைப் பொருளின் தீமை​கள் குறித்து ஆசிரியர்​கள் போதிய விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். குறிப்​பாக கல்​லூரி​, பல்​கலைக்​கழக மாணவர்​களுக்கு பயனுள்ள அறி​வுரைகளை வழங்க வேண்​டும். போதைப் பொருள் பழக்​கத்​தில் சிக்​கித் தவிக்​கும் மாணவர்​களை, ஆசிரியர்​கள் மீட்​டெடுக்க வேண்​டும்.

பள்​ளி, கல்​லூரி பரு​வத்​தில் மாணவ, மாணவர்​கள் மத்​தி​யில் செல்​போன் மோகம் அதி​கரித்து வரு​கிறது. சில மாணவர்​கள் நள்​ளிரவு வரை மொபைல் போன்​களில் மூழ்​கிக் கிடக்​கின்​றனர். இந்த அடிமைத்​தனத்​தில் இருந்து அவர்​களை ஆசிரியர்​கள் மீட்​டெடுக்க வேண்​டும். மைதானங்​களில் விளை​யாடத் தொடங்​கும்​போது மொபைல் போன் மோகம் படிப்​படி​யாக குறை​யும்.

மாணவ, மாண​வியரின் நலன்​களை கருத்​தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை அமல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இதன்​படி வகுப்​பறை மட்​டுமன்றி வெளிஉலக வாழ்க்கை குறித்​தும் மாணவ, மாண​வியருக்கு ஆசிரியர்​கள் தகுந்த ஆலோ​சனை​களை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ஆசிரியர் தினம் என்​பது நமது சமூகத்​துக்கு ஆசிரியர்​கள் ஆற்​றும் மகத்​தான பங்​களிப்பை பா​ராட்​டு​வ​தாகும். மேலும் இது மறைந்த முன்​னாள் குடியரசுத் தலை​வர் ரா​தாகிருஷ்ணனுக்கு மரி​யாதை செலுத்​தும்​ நாள்​ ஆகும்​” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT