இந்தியா

கோதாவரி ஆற்றில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பத்ராச்சலம்: ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் கல்​லூரி​யில் படிக்​கும் 7 மாணவர்​கள் தெலங்​கானா மாநிலம், பத்​ராச்​சலம் அருகே உள்ள கூனவரம் எனும் பகு​திக்கு சென்​றனர். அங்கு நேற்று காலை​ கோதாவரி நதி​யில் நீந்​தினர்.

இந்​நிலை​யில் ஆழமான பகு​திக்கு சென்​ற​தால் 5 பேர் ஆற்​றில் அடித்​துச் செல்​லப்பட்​டனர். தப்​பிய இரு மாணவர்​கள் அளித்த தகவலின்​பேரில் படகு​கள் மூலம் தேடும் பணி தொடங்​கியது. இதில் ஸ்ரீதர், அபி​ராம் ஆகிய இரு மாணவர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். தேஜு, நவதீப், சதீஷ்கு​மார் ஆகிய 3 பேரை தேடும் பணி தொடர்​கிறது.

          
SCROLL FOR NEXT