கோப்புப்படம்

 
இந்தியா

பிறந்த குழந்தையின் உடலை கவ்வியபடி சுற்றிய தெரு நாய்

செய்திப்பிரிவு

கான்பூர்: உத்​தர பிரதேச மாநிலம் கான்​பூரில் உள்ள பிரண்ட்ஸ் பூங்காவில் துணி​யில் சுற்​றப்​பட்ட ஒரு பொருளு​டன் தெரு நாய் ஓன்று நேற்று முன்​தினம் ஓடியது. அப்​போது அமித் திரிவேதி என்​பவர் சந்​தேகம் அடைந்து அந்த நாயை துரத்​தி​னார். இதில் அந்த நாய் அந்​தப் பொருளை போட்​டி​விட்டு ஓடி​விட்​டது.

துணியை அகற்​றிய​போது பிறந்த குழந்​தை​யின் சிதைந்த உடல் இருப்​பதை கண்டு அதிர்ச்​சி​யுற்​றனர். கை, கால்​கள் இல்​லாத அந்த உடலில் மார்பு பகுதி சேதம் அடைந்​திருந்​தது.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மருத்​து​வ​மனை​யில் இக்​குழந்தை பிறந்​திருக்கலாம் எனத் தெரிய​வந்​தது. இதன் அடிப்​படை​யிலும் சிசிடிவி பதிவு​களை ஆய்வு செய்​தும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். குழந்​தை​யின் உடலை பிரேதப் பரிசோதனைக்​கு அனுப்​பி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT