இந்தியா

இலங்கைக்கு 38,000 டன் பெட்ரோல், டீசல்: நன்றி தெரிவித்த அதிபர் திசாநாயக்க

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எரிபொருள் தட்​டுப்​பாட்​டால் பரித​வித்து வரும் இலங்கைக்கு 38,000 டன் பெட்​ரோல், டீசலை இந்​தியா வழங்கி உள்ளது.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக உலகம் முழுவதும் பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. குறிப்​பாக ஆசிய நாடு​கள் எரிபொருள் பற்​றாக்​குறை​யால் மிகக் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளன.

இந்​தி​யா​வின் அண்டை நாடான இலங்​கை​யில் பெட்​ரோல், டீசல் தட்​டுப்​பாடு மிக​வும் மோச​மான நிலையை எட்டி உள்​ளது. எரிபொருள் தட்​டுப்​பாட்டை சமாளிக்க அந்த நாட்​டில் புதன்கிழமை பொது விடு​முறை அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. ஒரு நான்கு சக்கர வாக​னத்​துக்கு ஒரு வாரத்​துக்கு 15 லிட்​டர் பெட்ரோல், இரு சக்கர வாக​னத்​துக்கு ஒரு வாரத்​துக்கு 5 லிட்​டர் பெட்​ரோல் மட்​டுமே விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. பெட்​ரோல், டீசல் விலை​யும் கணிச​மாக உயர்த்​தப்​பட்டு உள்​ளது.

          

போர் காரண​மாக நிலக்​கரி இறக்​குமதி பாதிக்​கப்​பட்டு இலங்கையின் அனல் மின் நிலை​யங்​கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்​கல் ஏற்​பட்​டிருக்​கிறது. இதனால் நாள்​தோறும் பல மணி நேரம் மின் வெட்டு அமல் செய்​யப்​படு​கிறது. இந்த சூழலில் இலங்​கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்​தியா வழங்கி உள்​ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிபர் அனுர குமார திசா​நாயக்க சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சில நாட்​களுக்கு முன்பு இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் தொலைபேசி​யில் பேசினேன். அப்​போது இலங்​கை​யில் நில​வும் எரிபொருள் தட்​டுப்​பாடு குறித்து அவரிடம் எடுத்​துரைத்​தேன். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்​கிழமை இலங்​கைக்கு 38,000 டன் எரிபொருளை இந்​தியா வழங்​கியது.

இந்​தி​யா​வின் விரை​வான உதவிக்கு நன்​றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் எங்களோடு ஒருங்​கிணைந்து செயல்​பட்டு வரு​கிறார். அவருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.இவ்​வாறு அதிபர் அனுர குமார திசா​நாயக்க கூறினார்.

SCROLL FOR NEXT