இந்தியா

நாட்டிலேயே பயணிகள் சேவை, வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த நிதி​யாண்​டில், இந்​திய ரயில்​வே​யில் பயணி​கள் சேவை மற்​றும் வரு​வா​யில் தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்​துள்​ளது.

கடந்த 2025-26-ம் நிதி ஆண்​டில் இந்​திய ரயில்​வே​யில் ஒட்​டுமொத்த மண்​டலங்​களி​லும் பயணி​கள் வரு​வா​யில் தெற்கு ரயில்வே ரூ.8,271.47 கோடி வரு​வாய் ஈட்டி முதலிடம் பிடித்​துள்​ளது. இது முந்​தைய ஆண்டை விட ரூ.735.78 கோடி (9.8%) அதி​க​மாகும். மேற்கு ரயில்​வே, மத்​திய ரயில்வே 2, 3-வது இடங்​களை பிடித்​துள்​ளன.

          

தெற்கு ரயில்​வே​யில் 229 சிறப்பு ரயில்​கள் மூலம் 2,513 பயணங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. 32.97 லட்​சம் பேர் பயணித்​துள்​ளனர். ஒரு பயணத்​துக்கு சராசரி​யாக 1,312 பயணி​கள் வீதம் பயணித்​து, தெற்கு ரயில்வே தேசிய அளவில் (சராசரி 894) முதலிடம் வகிக்​கிறது.

கடந்த நிதி ஆண்​டில் இந்​திய ரயில்​வே​யின் அனைத்து மண்​டலங்​களை​யும்​விட, முன்​ப​திவு ரயில்​களில் அதிக இடங்​கள் நிரப்​புதல் விகிதத்​தைப் பெற்​று, தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் இயக்​கப்​பட்ட ஒட்​டுமொத்த முன்​ப​திவு ரயில்​களில் 96 சதவீதம் ரயில்​கள், 75 சதவீதத்​துக்​கும் அதி​க​மான இடங்​கள் நிரப்​பப்​பட்டு இயங்​கி​யுள்​ளன.

கடந்த நிதி ஆண்​டில் இயக்​கப்​பட்ட மொத்​தம் 2.6 லட்​சம் ரயில் பயணங்​களில் (Trips), சுமார் 2.49 லட்​சம் பயணங்​கள் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையி​லான மிகச்​சிறந்த பயணி​கள் இடங்​கள் நிரப்​புதல் விகிதத்​தைக் கொண்​டிருந்​தன. இந்​திய ரயில்​வே​யின் ஒட்​டுமொத்த சராசரி இடங்​களை நிரப்​புதல் விகிதம் 87 சதவீத​மாக உள்ள நிலை​யில், தெற்கு ரயில்வே அதை​விட அதி​க​மாக 96 சதவீதம் பெற்​றுள்​ளது. சிறப்​பான திட்​ட​மிடல் மற்​றும் பயணி​கள் தேவைக்​கேற்ப ரயில்​களை இயக்​கியதன் மூலம் இந்த மைல்​கல்லை எட்​டி​யுள்​ளோம் என்று தெற்கு ரயில்வே செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT