இந்தியா

பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம், அரசியல் அமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜகவின் 12 ஆண்​டுகால ஆட்​சி​யில் இந்​தி​யாவின் ஜனநாயகம் மற்​றும் அரசி​யல் அமைப்​பு​களுக்கு பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது என காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி தெரி​வித்​துள்​ளார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Belonging: A Journey of Love’ வரும் 10-ம் தேதி உல​கம் முழு​வதும் வெளி​யிடப்​பட உள்​ளது.

இந்​நிலை​யில், சோனியா காந்தி ‘தி இந்து’ ஆங்​கில நாளிதழுக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 12 ஆண்​டுகால பாஜக ஆட்​சி​யில் நமது நாட்​டின் அடிப்​படைக் கட்​டமைப்​புக்​கும், ஜனநாயகத்​துக்​கும், அரசி​யல் அமைப்​பு​களுக்​கும் பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது.

மக்​கள் தற்​போது மத்​திய பாஜக அரசு மீது அதிருப்தி அடையத் தொடங்​கி​யுள்​ளனர். பாஜக அரசால் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​களை​யும் அவர்​கள் உணர்ந்து வரு​கின்​றனர். நல்ல நிர்​வாகம் மீண்​டும் திரும்​புவதை இந்​திய மக்​கள் வரவேற்​பார்​கள்.

நாட்​டில் அவசரநிலை பிறப்​பிக்​கப்​பட்ட அந்​தக் கால​கட்​டத்தை, முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் பார்​வை​யில் இருந்து பார்க்​கும்​போது, வேக​மாக மோசமடைந்து வந்த சூழ்​நிலைகளைக் கையாள அவர் போராடியதை உணர முடி​கிறது.

அவசரநிலை​யின் போது நடை​பெற்ற அத்​து​மீறல்​களுக்​காக அவர் பின்​னர் பகிரங்​க​மாக வருத்​தம் தெரி​வித்​ததுடன், மன்​னிப்​பும் கேட்​டார்.

காங்​கிரஸ் கட்சி ஒத்த கருத்​துடைய பிற அரசி​யல் கட்​சிகளு​டன் இணைந்து செயல்​பட்டு வரு​கிறது. எங்​கள் கட்​சி​யின் வெற்றி வாய்ப்​பு​கள் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கின்​றன. இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

பாஜக எதிர்ப்பு

இது​குறித்து மத்​திய சட்​டத்​துறை அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வால் கூறும்​போது, “சோனியாவிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்​பு​கிறேன்.

1975-ம் ஆண்டு ஜனநாயகம் நசுக்​கப்​பட்டதையும் அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கானோர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டதையும் அவர் மறந்​து​விட்​டாரா? ஆனால், கடந்த 12 ஆண்​டுகளில் பிரதமர் நரேந்​திர மோடி ஜனநாயகத்​தைப் பாது​காத்து, வளர்த்து, வலுப்​படுத்​தி​யுள்​ளார்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT