சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

 
இந்தியா

மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற வாக்குறுதியை அரசு காப்பாற்ற சோனம் வாங்சுக் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்​சுக் டெல்​லி​யில் உண்​ணா​விரதம் இருந்தார்.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீது எந்​தவொரு சட்ட நடவடிக்​கை​யும் எடுக்​கப்பட மாட்​டாது என்று மத்​திய அரசு உறுதி அளித்ததால், தனது உண்​ணா​விரதத்தை அவர் முடித்​துக் கொண்​டார்.

இதனிடையே சோனம் வாங்​சுக் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் கூறியதாவது: போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீது எஃப்​ஐஆர் பதிவு செய்​யப்பட மாட்​டாது என மத்​திய அரசு எழுத்​துப்​பூர்வமான வாக்​குறு​தியை அளித்​தது. அந்த வாக்​குறு​தியை மத்​திய அரசு நிறைவேற்ற வேண்​டும். மத்​திய அரசு தனது வாக்​கைக் காப்பாற்றி, மாணவர்​கள் மீது எந்​த​வித சட்ட நடவடிக்​கை​யும் பாயாது என்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

நாடாளு​மன்​றத்​தில் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள பொதுத் தேர்வு திருத்த மசோ​தாவை வரவேற்​கிறேன். இந்த மசோ​தா​வின் மூலம் நாட்​டின் கல்வி முறை​யில் பரந்த அளவி​லான முன்னேற்றங்களுக்கு வழி ஏற்​படும். நான் இப்​போது டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரயி​லில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இந்த ரயி​லில் செனாப் ரயில் பாலத்தைக் கடப்​பது மிக​வும் அழகான அனுபவம். இந்​திய ரயில்வே குறித்து நான் மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன்.

நாட்​டில் தேர்வு முறையை மேம்​படுத்​து​வதற்​கான மசோதா நாடாளு​மன்​றத்​தில் கொண்​டு​வரப்​பட்​ட​தில் மகிழ்ச்​சி. இந்​தச் சீர்​திருத்​தம் தேர்​வு​கள் சார்ந்து மட்​டுமல்​லாமல், ஒட்​டுமொத்​தக் கல்வி முறை​யிலும் அமை​யும் என்று நான் நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT