இந்தியா

டிசிஎஸ் ஊழியர்களுக்கு வலைதளங்களில் தொல்லை

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக்​கில் உள்ள டிசிஎஸ் கிளை அலு​வல​கத்​தில் பணிபுரிந்த பெண் ஊழியர்​கள், பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு மதமாற்​றம் செய்​யப்​படு​வ​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, அந்த நிறு​வனத்​தின் 7 முக்​கிய நபர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், பேஸ்​புக், இன்​ஸ்​டா கி​ராம் மற்​றும் வாட்ஸ்- அப் போன்ற டிஜிட்​டல் தளங்​கள் மூலம் பெண் ஊழியர்​களுக்​குத் தேவையற்ற குறுஞ் ​செய்​தி​களை அனுப்​பி தொல்லை கொடுத்ததாக கைதானவர்​களே வாக்​கு மூலம் கொடுத்​துள்ளனர்.

பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்​குக் குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் அனுப்​பிய ஆபாசக் கருத்​துகள், சர்ச்​சைக்​குரிய வீடியோக்​கள் மற்றும் உரை​யாடல்​களைக் காவல் துறை​யினர் தற்​போது ஆய்வு செய்து வரு​கின்​றனர். குற்​ற​வாளி​களின் செல்​போன்​கள் மற்​றும் சமூக வலை​தளக் கணக்​கு​களில் இருந்து அழிக்​கப்​பட்ட உரையாடல்​களைத் தொழில்​நுட்ப வல்​லுநர்​களின் உதவி​யுடன் மீட்​கும் பணி​யில் காவல் துறை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம், மகாராஷ்டிர காவல் துறை, டிசிஎஸ் நிறு​வன அதி​காரி​களுக்கு நோட்டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து விரி​வான வி​சா​ரணை நடத்​தி, எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்த அறிக்​கையை சமர்ப்​பிக்​க ஆணை​யம்​ உத்​தர​விட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT