இந்தியா

சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தத் தடை? - மத்திய அரசு பரிசீலனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 16 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர்​கள் சமூக வலை​தளங்​களைப் பயன்​படுத்​து​வதற்​குப் பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதிப்​பது குறித்து மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது.

இதுகுறித்து மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வயது அடிப்​படை​யில் கட்​டுப்​பாடு கொண்டு வரு​வது குறித்​து பல்​வேறு சமூக வலைதள நிறு​வனங்​களு​டன் அரசு ஆலோ​சனை​களை நடத்தி வரு​கிறது.

          

ஒவ்​வொரு நாட்​டின் கலா​சார சூழலை​யும் பன்​னாட்டு நிறு​வனங்​கள் புரிந்​து​கொள்ள வேண்​டும். டீப்ஃபேக் காணொலிகளைக் கண்​டறிந்த 3 மணி நேரத்​திற்​குள் நீக்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட புதிய விதி​கள் ஏற்​கெனவே அமலில் உள்​ளன. தற்​போது ‘டீப்ஃபேக்'

எனப்​படும் போலி காணொலிகள் மற்​றும் வயதுக் கட்​டுப்​பாடு​கள் குறித்து விரி​வான பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது. இவ்​வாறு அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

உயர​தி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “இப்​போதுள்ள சூழ்​நிலை​யில் சிறு​வர்​களுக்கு சமூக வலைதள அனு​மதி அவசியமா என்​பது குறித்து மிகுந்த கவனத்​துடன் முடி​வெடுக்க வேண்​டி​யுள்​ளது. ஆஸ்​திரேலி​யா​வில் பின்​பற்​றப்​படும் நடை​முறை​களை அரசு ஆய்வு செய்து வரு​கிறது. எனினும், ஆஸ்​திரேலி​யா​வைப் போல 16 வயதுக்கு உட்​பட்​டோருக்கு முழு​மை​யான தடை விதிக்​கும் எண்​ணம் எது​வும் மத்​திய அரசிடம் தற்​போதைக்கு இல்​லை.

2021-ம் ஆண்​டின் தகவல் தொழில்​நுட்ப (இடைநிலை வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் டிஜிட்​டல் ஊடக ஒழுக்க நெறி​முறை​கள்) வி​தி​களில் இதற்​காக திருத்​தங்​களை மேற்​கொள்ள அரசு திட்​ட​மிட்​டுள்​ளது” என்​றார்​.

SCROLL FOR NEXT