கொலை வழக்கில் விடுதலையான 9 பேருக்கு ஆயுள் தண்டனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதி​மன்​றம்

சென்னை உயர் நீதி​மன்​றம்

Updated on
1 min read

சென்னை: கொலை வழக்​கில் விடு​தலை​யான 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த ஏழு​மலை, அவரது மகன் ரமேஷ் ஆகியோர் 2011 ஏப்.25-ல் ஒரு வழக்கு தொடர்பாக திரு​வண்​ணா​மலை காவல் நிலை​யத்​தில் கையெழுத்​திட்​டு ​விட்​டு, தென்​றல் நகர் பேருந்து நிறுத்​தம் அருகே இருசக்கர வாக​னத்​தில் சென்ற போது, அதே பகு​தி​யைச் சேர்ந்த ரவிச்​சந்​திரன், தேவ​தாஸ், அம்​புரோஸ், ரஞ்​சன், வெங்​கடேசன், மஞ்​சு​நாதன், கருணாநி​தி, சூரியபிர​காஷ் மற்​றும் ராஜா (எ) ராமன் ஆகியோர் திடீரென கத்​தி, அரி​வாளால் இரு​வரை​யும் சரமாரி​யாக வெட்​டினர்.

பண விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்தது. இதில் ரமேஷ் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் ஏழு​மலை உயிர் பிழைத்​தார். இதுதொடர்​பாக 9 பேரை​யும் திரு​வண்​ணா​மலை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த திரு​வண்​ணா​மலை மாவட்ட அமர்வு நீதி​மன்​றம், போதிய ஆதா​ரம் இல்லை என்று கூறி, அனை​வரை​யும் விடு​வித்​தது. இதை எதிர்த்து காவல் துறை, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்தது.

இந்த வழக்கு நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்.ஜோதி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஏ.தாமோதரன், “குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களுக்கு எதி​ரான ஆதா​ரங்​கள் வலு​வாக இருந்​தும், அதை விசா​ரணை நீதி​மன்​றம் கவனத்​தில் கொள்​ள​வில்​லை” என வாதிட்​டார்.

இதையடுத்து நீதிப​தி​கள், “இந்த வழக்​கில் கொலைக் குற்​றம் சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, 9 பேரை​யும் குற்​ற​வாளி​கள் என்று தீர்​மானித்​து, அவர்​களை விடுவித்த அமர்வு நீதி​மன்​ற தீர்ப்பை ரத்து செய்​கிறோம். 9 பேருக்​கும் ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்​கிறோம். மேல்​முறை​யீடு செய்ய 90 நாட்​களுக்கு தண்​டனையை நிறுத்தி வைக்​கிறோம்” என்று உத்​தர​விட்​டனர்.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதி​மன்​றம்</p></div>
“மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in