சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்
புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங் சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது.
அவரது உடல்நிலை மிக மோசமடைந்துள்ள நிலையில், “நான் உடல் அளவில் வெளியே பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” என்று சோனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போராட்டக் குழுவினர் கூறும்போது, “சோனம் வாங்சுக் இதுவரை 8.25 கிலோ உடல் எடையை இழந்துள்ளார். தொடர்ச்சியான தலைச்சுற்றல், கடுமையான தசை இழப்பு மற்றும் உடல் பலவீனம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஆபத்தான நிலையிலும், மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை எவரும் வந்து பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை” என்றனர்.