இந்தியா

உ.பி.யின் கான்பூரில் சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் 6 பேர் கைது

ரூ.10 லட்சத்துக்கு வாங்கி ஒரு கோடிக்கு விற்பனை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் ஒரு மருத்​து​வத் தம்​ப​தி​ தனி​யார் மருத்​து​வ​மனை நடத்தி வரு​கின்​றனர். இவர்​கள் பல்​வேறு தரகர்​கள் மூலம் சிறுநீரகம், கல்​லீரலை சட்​ட​விரோதமாகப் பெற்று நோயாளி​களுக்கு பொருத்தி வந்​துள்​ளனர்.

இந்த தகவல் உ.பி. உளவுப்​பிரிவுக்கு சில நாட்​களுக்கு முன்பு கிடைத்​துள்​ளது. இதையடுத்து தனி​யார் மருத்​து​வ​மனையைத் தீவிர​மாக கண்​காணித்து வந்​தனர். இதில், உடல் உறுப்​பு​களைப் பணத்​துக்​காக தானம் செய்​தவரும், அதை பெற்​றவரும் அறுவை சிகிச்சை செய்த போதே கையும் களவு​மாகப் பிடிபட்​டுள்​ளனர்.

          

உத்​த​ரா கண்​டைச் சேர்ந்த ஆயுஷ் என்ற பெறுநரை​யும், ஒரு கொடை​யாளியை​யும் உ.பி. அதி​காரி​கள் பிடித்து விசா​ரித்து வருகின்​றனர். கொடை​யாளிக்கு யுபிஐ மூலம் ரூ.3.5 லட்​சம், ரொக்க​மாக ரூ.6 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் மருத்​து​வத் தம்​ப​தி​கள் உள்​ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது​வரை சுமார் 60 உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைகள் நடைபெற்​றது தெரிந்​துள்​ளது. சில தினங்​களுக்கு முன்பு ஆப்பிரிக்கா நாட்​டைச் சேர்ந்த ஒரு பெண்​ணுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடை​பெற்​றுள்​ளது. இதனால், இந்த கும்பலுக்கு சர்​வ​தேச தொடர்​பு​கள் இருக்​காலாம் என விசாரிக்கப்படு​கிறது.

இந்த மோசடி​யில் மருத்​து​வ​மனை ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் ஷிவாம் அகர்​வால் முக்​கிய பங்கு வகித்​துள்​ளார். இவர் ஸ்டெதஸ்​கோப் சகிதம் மருத்​து​வ​ராக வலம் வந்​துள்​ளார். ஒரு சிலரை பண ஆசை காட்டி மருத்​து​வ​மனைக்​கும் அழைத்து வந்​துள்​ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​ட​வர்​களது பெயர் விவரங்கள் எது​வும் பதிவு செய்​ய​வில்​லை.

உ.பி., பிஹார், சத்​தீஸ்​கர் உள்​ளிட்ட மாநிலங்​களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்த மோசடி நடை​பெற்​றுள்​ளது. உறுப்பு வழங்​கிய​வர்​களுக்கு ரூ.5 லட்​சம் முதல் 10 லட்​சம் வரை அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், நோயாளி​களுக்கு ரூ.1 கோடி வரை விற்​கப்​பட்​டுள்​ளது வி​சா​ரணை​யில்​ தெரிய வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT