இந்தியா

பிஹாரில் ரயிலில் பாம்புகளை காட்டி பணம் பறித்த 6 பேர் கைது

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் கிழக்கு மத்​திய ரயில்​வே​யின் சோன்​பூர் கோட்​டத்​தின் கீழ் இயக்​கப்​படும் ஜன்​சேவா எக்​ஸ்​பிரஸ் ரயில், சாப்ரா ரயில் நிலை​யத்​தில் இருந்து நேற்று புறப்​பட்​டது. அப்​போது, பொதுப் பெட்​டி​யில் ஏறிய ஒரு கும்​பல் பாம்​பு​களைக் காட்டி பயணி​களிடம் பணம் கேட்​டனர்.

இதுதொடர்​பாக, பயணி​கள் சிலர் அளி்த்த புகாரின் பேரில், ரயில்வே பாது​காப்​புப் படை போலீ​ஸார் ரயி​லின் பொதுப் பெட்​டிகளில் சோதனை நடத்​தினர். அப்​போது, 6 பேர் பாம்​பு​களைக் காட்டி பயணி​களிடம் பணம் பறித்​தது தெரிய வந்​தது. இதையடுத்​து, 6 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT