இந்தியா

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் 2ம் கட்ட விசாரணையைத் தொடங்கியது எஸ்ஐடி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக விசா​ரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசா​ரணைக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.

இதன் முதல்​ கட்ட விசா​ரணை​யில் திருட்டு உறுதி செய்​யப்​பட்டு 8 பேர் கைது செய்​யப்​பட்​டதுடன் அவர்​கள் மீது வழக்கு பதிவு செய்யப்​பட்​டுள்​ளது. இதன் இரண்​டாம் கட்ட விசா​ரணை நேற்று தொடங்​கியது. விசா​ரணை​யில் முக்​கிய​மாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்​தியா (எஸ்​பிஐ) கிளை​யின் அதி​காரி​கள் மற்​றும் அலு​வலர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

ராமர் கோயி​லில் பெறப்​படும் காணிக்​கைகள் தொடர்​பாக, கடந்த பிப்​ர​வரி 2024-ல் எஸ்​பிஐ மற்​றும் ​ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​டது. உண்​டியலில் இருந்து காணிக்​கைகளை எடுப்​பது, அவற்றை எண்​ணுவது மற்​றும் வங்​கி​யில் செலுத்​து​வது ஆகிய பொறுப்​பு​கள் எஸ்​பிஐ-​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

தொடக்​கத்​தில், இப்​பணிக்​காக 10 பேர் மட்​டுமே பணியமர்த்தப்பட்​டனர். மாதாந்​திர காணிக்கை வரவு 14 முதல் 15 கோடி ரூபாயாக உயர்ந்​த​தால், எஸ்​பிஐ ஒரு தனி​யார் முகமை மூலம் ஊழியர்​களின் எண்​ணிக்​கையை 40 ஆக உயர்த்​தி​யது. இருப்பினும், அந்த முகமைக்கு ஒப்​பந்​தம் டெண்​டர் மூலம் வழங்கப்​பட்​ட​தாகத் தெரிய​வில்​லை.

அதே சம​யம், அந்த முகமை​யின் பணி​யாளர்​களின் பின்​னணி பற்றி காவல் துறை சரி​ பார்த்​த​தாக​வும் தெரிய​வில்​லை. அவர்களில் பலர் கோயில் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் மற்றும் டின்னு யாதவ் ஆகியோரின் பரிந்​துரை​யின் பேரில் பணியமர்த்​தப்​பட்​ட​தாகத் தகவல் உள்​ளது. இதனால், கைதான 8ல் 5 பேர் ஒரு​வொருக்கு ஒரு​வர் உறவினர்​கள். எனவே, இது குறித்து எஸ்​ஐடி தீவிர​மாக விசா​ரிக்க உள்​ளது.

ராமர் கோயில் வளாகத்​தில் சுமார் 850 ஊழியர்​கள் பணிபுரிகின்றனர். இவர்​களில் சுமார் 650 பேர் ஒப்​பந்த ஊழியர்கள், மீத​முள்​ளவர்​கள் அறக்​கட்​டளை​யால் நேரடி​யாகப் பணி​யமர்த்​தப்​பட்​ட​வர்​கள். ஆள்​சேர்ப்பு செயல்​முறை​யின்​ போது பல முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக​வும் புகார்​கள் உள்​ளன. முதலில், அறக்​கட்​டளை அதி​காரி​கள் தங்​கள் உறவினர்​களை நியமித்​தனர். பின்​னர், பணி நியமனம் பெற்​றவர்​கள் தங்​களுக்கு நெருக்​க​மானவர்​களுக்​கும் வேலை பெற்​றுத் தரத் தொடங்​கினர். இது​போன்ற காரணங்​களால், காணிக்கை திருடு போகத் தொடங்கிய​தாகக் கூறப்​படு​கிறது.

அவசர வழக்​காக விசா​ரிக்க மறுப்பு: இந்​நிலை​யில், ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு உத்தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அவசர மனு தாக்​கல் செய்யப்​பட்​டிருந்​தது. தற்​போது கோடை விடு​முறை தொடரும்​ நிலையில்​ இம்​மனுவை அவசர​மாக வி​சா​ரிக்​க உச்​ச நீதி​மன்​றம்​ மறுத்துவிட்​டது. எனவே, கோடை விடு​முறைக்​கு பின்​ வி​சா​ரணை நடைபெறும்​ என எதிர்​​பார்​க்​கப்​படுகிறது.

காணிக்கை திருடருக்கு வாதாடினால் ரூ.5 லட்சம் அபராதம்: வழக்கறிஞர் சங்கம் முடிவு- உத்தர பிரதேசத்​தின் பைசா​பாத் வழக்​கறிஞர் சங்​கத்​தின் பொதுக் குழு கூட்​டம் நேற்று நடைபெற்றது. இதில் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டில் தொடர்​புடைய நபர்கள் சார்​பில் எந்த வழக்​கறிஞரும் ஆஜராகக் கூடாது எனவும், மீறி​னால் ரூ.5 லட்​சம் அபராதம் விதிக்கப்​படும் எனவும் முடிவு செய்​யப்​பட்​டது. மேலும், இந்த சர்ச்சை​யில் சிக்​கிய அறக்​கட்​டளை நிர்​வாகி​கள் சம்​பத் ராய், அனில் மிஸ்ரா மற்​றும் கோபால் ராவ் ஆகியோர் அயோத்தியைவிட்டு 3 நாட்​களில் வெளியேற வேண்​டும் என வழக்கறிஞர் சங்​கம் கூறி​யுள்​ளது.

இது குறித்து வழக்​கறிஞர் சங்க தலை​வர் கலிக பிர​சாத் மிஸ்ரா கூறுகை​யில், ‘‘இந்த மிகப் பெரிய திருட்டு சம்​பவம் அறக்​கட்​டளை நிர்​வாகி​கள் சம்​பத் ராய், கோபால் ராவ் மற்​றும் அனில் மிஸ்ராவுக்கு தெரி​யாமல் நடை​பெற்​றிருக்க முடி​யாது. இந்த வழக்கு வி​சா​ரணையை கையாள ஒரு குழு அமைப்​பது குறித்த அறி​விப்​பு விரை​வில்​ வெளி​யிடப்​படும்’’ என்​றார்​.

SCROLL FOR NEXT