கோப்புப்படம்

 
இந்தியா

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க கேரளாவில் 1 வாரம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படுகின்றன. எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாளாகும். எனினும் தேர்தல் ஆணைம் இதனை 11-ம் தேதி வரை ஒரு வாரம் நீட்டித்தது.

இந்நிலையில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக எஸ்ஐஆர் பணியை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு முறையிட்டது.

கேரள அரசின் கோரிக்கை ஏற்று எஸ்ஐஆர் அட்டவணையை தேர்தல் ஆணையம் 1 வாரம் நீட்டித்துள்ளது. இதன்படி, கேரளாவில் டிசம்பர் 18-ம் தேதி வரை வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

SCROLL FOR NEXT