இந்தியா

ஈரானுக்கு உதவ லடாக்கில் நடந்த ஏலத்தில் 1 முட்டை ரூ.25,000-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

லே: ஈ​ரானில் போரால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உதவுவதற்​காக, லடாக் யூனியன் பிரதேசத்​தின் லே மாவட்​டத்​தில், அஞ்​சுமன் இமாமியா லே மற்​றும் மஜ்லிஸ்​-ஏ-உலமா லே உள்​ளிட்ட உள்​ளூர் அமைப்​பு​கள் நிதி திரட்டி வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, நடை​பெற்ற ஒரு ஏல நிகழ்ச்​சி​யில் ஒரு முட்டை மட்​டும் ரூ.25,000-க்கு விற்​பனை​யானது. அந்த முட்​டையை ஏலத்​தில் வாங்​கிய ஷபீர் உசேன் கூறும்​போது, “ஒரு முட்​டை​யின் விலை ரூ.10 என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். என்​னிடம் பணம் உள்ளது என்பதால் நான் ரூ.25,000 கொடுக்​க​வில்​லை. ஈரானில் குழந்​தைகள் எவ்​வளவு ஒடுக்​கு​முறைக்கு உள்​ளாக்​கப் ​படுகிறார்கள் என்ற செய்​தியை இது உலகுக்​குச் சொல்​கிறது.

          

அவர்​களுக்​காகவே நான் இந்​தத் தொகையை வழங்​கினேன். நாங்கள் எங்​கள் உயிரை​யும் கொடுக்கத் தயா​ராக இருக்​கிறோம். இந்த சமூகத்​துக்​காகவே நாங்​கள் வாழ்​கிறோம். எங்​கள் தலை​வர் என்ன சொல்​கிறாரோ அதைப் பின்​பற்ற நாங்​கள் கடமைப்பட்டுள்ளோம். இது​வரை, எங்​கள் தலை​வர் எங்​களுக்கு எந்த உத்​தர​வும் பிறப்​பிக்​க​வில்​லை" என்​றார்.

ஜம்மு காஷ்மீர் மக்களும் பணம் மட்​டுமல்​லாமல் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைகள், கால்​நடைகள் மற்​றும் பாரம்​பரிய செப்​புப் பாத்திரங்​களை​யும் நன்​கொடை​யாக வழங்கி வரு​கின்​றனர்​ என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT