சித்​த​ராமையா

 
இந்தியா

கர்நாடக முதல்வராக அதிக நாட்கள் ஆட்சி செய்து சித்தராமையா சாதனை

விழா நடத்த ஆதரவாளர்கள் திட்டம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாட​காவை அதிக நாட்​கள் ஆட்சி செய்த முதல்​வர் என்ற சாதனையை சித்​த​ராமையா படைத்​துள்​ளார். இதன் மூலம் முன்​னாள் முதல்​வர் தேவ​ராஜ் அர்​ஸின் சாதனையை அவர் முறியடித்​துள்​ளார்.

கடந்த 35 ஆண்​டு​களாக கர்​நாடக மாநிலத்​தின் வரலாற்​றில் அதிக நாட்​கள் முதல்​வ​ராக ஆட்சி செய்​தவர் என்ற பட்​டியலில் தேவ​ராஜ் அர்ஸ் முதலிடத்​தில் இருந்​தார். அவர் 1972, 1978 ஆகிய ஆண்​டு​களில் நடந்த தேர்​தல்​களில் தொடர்ச்​சி​யாக வென்று 2,789 நாட்​கள் (7 ஆண்​டு​கள் 6 மாதங்​கள்) முதல்​வ​ராக பதவி வகித்​தார். அவருக்கு அடுத்த இடத்​தில் நிஜலிங்​கப்பா 7 ஆண்​டு​கள் 175 நாட்​கள் முதல்​வ​ராக இருந்​தார்.

இந்​நிலை​யில், தற்​போதைய முதல்​வர் சித்​த​ராமையா ஜனவரி 6ம் (இன்​று) தேதி​யுடன் தேவ​ராஜ் அர்ஸ் பதவி​யில் இருந்த நாட்​களை சமன் செய்​கிறார். ஜனவரி 7-ம் தேதி​யுடன், அதிக நாட்​கள் கர்​நாட​காவை ஆண்ட முதல்​வர் என்ற தேவ​ராஜ் அர்​ஸின் சாதனையை முறியடிக்​கிறார். ஜனவரி 7-ம் தேதிக்கு பின்​னர் அதிக நாட்​கள் கர்​நாட​காவை ஆட்சி செய்த முதல்​வர் என்ற பெரு​மை சித்​த​ராமை​யா​வை வந்​தடையும்​.

SCROLL FOR NEXT