ஷியாமா பிரசாத்

 
இந்தியா

ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாள்: பிரதமர் உட்பட தலைவர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​பார​திய ஜன சங்க நிறு​வனர் ஷியாமா பிர​சாத் முகர்ஜி​யின் 125-வது பிறந்த நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்டி பிரதமர் மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் அவருக்கு மரி​யாதை செலுத்​தினர். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு கடந்த 1951ம் ஆண்டு பார​திய ஜன சங்​கத்தை ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்​கி​னார். நாட்​டுக்​காக தொடர்ந்து சேவை​யாற்​றிய அவர் கடந்த 1953ம் ஆண்டு மே 11ம் தேதி உயி​ரிழந்​தார். இந்த சூழலில் ஷியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் 125-வது பிறந்த நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்டி பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் மிக​வும் குறிப்பிடத்தக்க தேச கட்​டமைப்​பாளர்​களில் டாக்​டர் ஷியாமா பிரசாத் முகர்​ஜி​யும் ஒரு​வர். அவரது 125-வது பிறந்த நாளில் அவருக்கு நான் தலை​வணங்​கு​கிறேன். இந்​தி​யா​வின் ஒற்​றுமை, கண்​ணி​யம், முன்​னேற்​றம் ஆகிய​வற்​றுக்​காக அவர் தனது வாழ்​நாளை அர்ப்​பணித்​தார். ஷியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் பங்களிப்பு​கள் பல்​வேறு துறை​களி​லும் பரவி​யுள்​ளன. சிந்தனையாள​ராக​வும், கல்​வி​யாள​ராக​வும் விளங்​கிய அவர் புதுமை, எதிர்​காலம் சார்ந்த கற்​றலுக்கு ஆதர​வாக இருந்​தார்.

இந்​தி​யா​வின் ஒற்​றுமை, ஒரு​மைப்​பாட்​டுக்கு அவர் இன்​றள​வும் ஊக்க சக்​தி​யாக விளங்​கு​கிறார். வளர்ச்​சி​யடைந்த இந்​தியா என்ற பயணத்​தில் நாம் முன்​னேறிச் செல்​லும் நிலை​யில் அவரது தொலை நோக்​குப் பார்வை நமது பாதைக்கு தொடர்ந்து ஒளி விளக்​காக திகழ்​கிறது. இவ்​வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன், மத்​திய அமைச்​சர்​கள், பல்​வேறு மாநிலங்​களின் முதல்​வர்​கள், தேசிய, பிராந்​திய கட்​சிகளின் தலை​வர்​கள் ஷியாமா பிர​சாத் முகர்​ஜிக்கு மரி​யாதை செலுத்தி உள்​ளனர்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று கொல்​கத்​தா​வில் உள்ள முகர்​ஜி​யின் பூர்​வீக வீட்​டுக்கு சென்று மரி​யாதை செலுத்தினார். கொல்​கத்​தா​வின் சுற்​றுச்​சூழல் பூங்​கா​வில் முகர்ஜிக்கு 125 அடி உயரத்​தில் சிலை அமைக்​கப்பட உள்​ளது. இதற்​கு அமைச்​சர்​ அமித்​ ஷா அடிக்​கல்​ ​நாட்​டி​னார்​.

SCROLL FOR NEXT