புதுடெல்லி: சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவியுள்ள ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களுக்கு இந்தியா சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்க வேண்டுமா என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக டெல்லி காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட ரோஹிங்கியாக்களை விடுவிக்கக் கோருவது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது நீதிபதிகள், ரோஹிங்கியாக்களை இந்திய அரசு அகதிகளாக அறிவித்துள்ளதா, அவர்கள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வமான அனுமதி உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்க வேண்டுமா என்று கண்டிப்புடன் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே இலங்கை அகதிகள் விவகாரத்தில் இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.