‘டிஜிட்டல் அரஸ்ட்’ மூலம் ஆண் நர்ஸிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த 3 பேர் ஆந்திராவில் கைது

‘டிஜிட்டல் அரஸ்ட்’ மூலம் ஆண் நர்ஸிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த 3 பேர் ஆந்திராவில் கைது
Updated on
1 min read

அமராவதி: ஆந்​திர மாநிலம் அன்​னமய்யா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ரேபுரி பெஞ்​சமின் (75). இவர் நர்​ஸாகப் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். இவருக்கு ஒரு வீடியோ அழைப்பு வந்​துள்​ளது. அதில் பேசி​ய​வர்​கள், தாங்​கள் சிபிஐ மற்​றும் அமலாக்​கத் துறையைச் சேர்ந்த அதி​காரி​கள் என்று அறி​முகப்​படுத்தி கொண்​டனர்.

பான் கார்டை தவறாகப் பயன்​படுத்தி டெல்​லி​யில் போலி​யாக வங்​கிக் கணக்கு தொடங்கி உள்​ள​தாக​வும், ஹவாலா பணம் ரூ.48 லட்​சம் அவருடைய வங்​கிக் கணக்​குக்கு பரி​மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் பெஞ்​சமின் மீது குற்​றம் சாட்​டினர்.

மேலும், வீடியோ அழைப்பை துண்​டிக்க கூடாது. எங்​கும் வெளி​யில் செல்ல கூடாது. யாருட​னும் பேசக் கூடாது என்று மறு​முறை​யில் இருந்து அந்த போலி அதி​காரி​கள் மிரட்​டல் விடுத்​துள்​ளனர். வழக்கு மற்​றும் கைது நடவடிக்​கை​யில் இருந்து தப்​பிக்க வேண்​டு​மா​னால் பணம் செல​வாகும் என்று கூறி​யுள்​ளனர்.

இதையடுத்து பிரச்​சினை​யில் இருந்து தப்​பிக்க அவர்​கள் கூறியபடி பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களுக்கு அவர்​கள் குறிப்​பிட்ட ரூ.48 லட்​சத்தை பெஞ்​சமின் அனுப்பி வைத்​தார். பின்னர் தான் ஏமாற்​றப்​பட்​டதை அறிந்து போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீ​ஸார்,பல்​வேறு மாநிலங்​களில் இது​போல் டிஜிட்​டல் மோசடி​யில் ஈடு​பட்டு வந்த 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

‘டிஜிட்டல் அரஸ்ட்’ மூலம் ஆண் நர்ஸிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த 3 பேர் ஆந்திராவில் கைது
கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை 81% குறைந்தது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in