இந்தியா

நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு: பாலிவுட் முக்கிய நடிகர்களுக்கு மும்பை காவல் துறை பாதுகாப்பு எச்சரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்​பாக்​கிச் சூடு தாக்குதலின் எதிரொலியாக பாலிவுட் பிரபலங்​களுக்கு மும்பை காவல்துறை பாது​காப்பு எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்தமாதம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்​பாக்கி சூடு நடத்​தப்​பட்​டது. இதற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல், பொறுப்​பேற்​றிருந்​தது. எனினும், இந்​தத் தாக்குதலில் நடிகர் ஷெராப் தப்பி விட அவரது வாகன ஓட்​டுநர் உள்ளிட்ட இரு​வர் காயமடைந்​தனர். இதை​யொட்டி, மும்பை காவல்​துறை சார்​பில் பல முக்​கிய பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு எச்​சரிகை விடுத்​துள்​ளது.

இந்த எச்​சரிக்​கை​யில், பாலிவுட் பிரபலங்​கள் பொது இடங்களுக்குச் செல்​வதைத் தவிர்க்க வேண்​டும், பொது இடங்களில் ரசிகர்​களின் வேண்​டுகோளுக்கு இணங்க செல்ஃபி எடுப்​ப​தையும் தவிர்க்க வேண்​டும் என்று மும்பை போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இது குறித்து மும்பை காவல் துறை வட்டாரங்கள் கூறும்​போது, “கடந்த 1990-ம் ஆண்​டுகளில் இருந்த நிழல் உலக தாதா கும்​பல்​களிட​மிருந்து யார் யாருக்கு மிரட்​டல் அழைப்​பு​கள் வந்​தன என்ற தகவல்​கள் போலீ​ஸாருக்​குத் தெரிந்திருந்​தன.

அதற்​கேற்ப அவர்​களுக்கு பாது​காப்பு ஏற்​பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், நடிகர்​களான ரோஹித் ஷெட்டி, டைகர் ஷெராப் ஆகியோ​ருக்கு எந்​த​வித மிரட்​டல் அழைப்​பு​களும் வராமலேயே குறிவைக்​கப்​பட்​டனர்.

இந்​தச் சம்​பவங்​களி​லிருந்து பாடம் கற்​றுக்​கொண்ட மும்பை போலீ​ஸார், பாலிவுட்​டின் முன்னணி பிரபலங்​கள் அனைவரின் பாது​காப்பு ஏற்பாடுகளையும் மறுஆய்வு செய்து வரு​கின்​றனர்.

டைகர் ஷெராப் துப்​பாக்​கிச் சூடு வழக்​கில் கைதானவர்​களின் விசா​ரணை​யில், வேறு எந்​தெந்த நடிகர்​களின் வீடுகளை அவர்கள் கண்​காணித்​தனர் என்பது குறித்த தகவல்​கள் போலீஸாருக்​குக் கிடைத்​துள்​ளன. இதன் அடிப்​படை​யில், சம்பந்தப்​பட்ட பல பிரபலங்​களின் பாது​காப்பு பலப்படுத்தப்பட்டுள்​ளது,’’ என்று தெரிவிக்கின்றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT