இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலிதளம் ஆதரவு

செய்திப்பிரிவு

சண்டிகர்: தொகுதி மறு​வரையறை மசோ​தாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு அளித்து உள்​ளது.

மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த ) மசோதா 2026 ஆகிய 3 மசோ​தாக்​கள் கடந்த நாடாளு​மன்ற கூட்​டத் தொடரில் மக்​களவை​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​களை நிறைவேற்ற மூன்​றில் இரு பங்கு எம்​பிக்​களின் ஆதரவு தேவை. போதிய ஆதரவு இல்​லாமல் மசோ​தாக்​களை நிறைவேற்ற முடிய​வில்​லை.

தற்​போதைய நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரில் இந்த மசோ​தாக்​களை நிறைவேற்ற மத்​திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆளும் பாஜக தரப்​பில் பல்​வேறு கட்​சிகளிடம் ஆதரவு கோரப்​படு​கிறது. இந்த சூழலில் பஞ்​சாபின் பிர​தான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தள தலை​வர் சுக்​பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசி​னார். இதைத் தொடர்ந்து சுக்​பீர் சிங் பாதல் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

சிரோமணி அகாலி தளத்​தின் மூத்த தலை​வர்​கள் கூட்​டம் சண்​டிகரில் சனிக்​கிழமை நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் மகளிர் இடஒதுக்​கீட்டை உடனடி​யாக அமல் செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது. சீக்​கிய குருக்​களின் வழி​காட்​டு​தல்​களின்​படி பெண்​களுக்கு சம உரிமை வழங்​கு​வதை சிரோமணி அகாலி தளம் முழு​மனதுடன் ஆதரிக்​கிறது. இதே​போல நேர்​மை​யான, சரிசம​மான தொகுதி மறு​வரையறையை​யும் ஆதரிக்​கிறோம். அனைத்து மாநிலங்​களி​லும் 50 சதவீதம் அளவுக்கு தொகு​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​படும் என்று மத்​திய அரசு உறுதி அளித்​திருக்​கிறது. எனவே தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நாங்​கள் ஆதரிக்​கிறோம். இவ்​வாறு சுக்​பீர் சிங் பாதல் தெரி​வித்​துள்​ளார்.

பஞ்​சாப் பேர​வைத் தேர்​தல்

கடந்த 1996-ம் ஆண்​டில் சிரோமணி அகாலி தளமும் பாஜக​வும் கூட்​டணி அமைத்​தன. இந்த கூட்​டணி கடந்த 1997-ம் ஆண்​டில் பஞ்​சாபில் ஆட்சி அமைத்​தது. கடந்த 2007, 2012-ம் ஆண்​டு​களி​லும் பஞ்​சாபில் இதே கூட்​டணி ஆட்சி நீடித்​தது.

கருத்து வேறு​பாடு​கள் காரண​மாக கடந்த 2020-ம் ஆண்​டில் சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்​டணி உடைந்​தது. கடந்த 2022-ம் ஆண்டு பஞ்​சாப் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இரு கட்​சிகளும் தனித்​தனி​யாக போட்​டி​யிட்டு பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தன.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள பஞ்​சாப் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இரு கட்​சிகளும் மீண்​டும் கூட்​டணி அமைக்க முடிவு செய்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதன் ஒரு பகு​தி​யாகவே சிரோமணி அகாலி தளம் தலை​வர் சுக்​பீர் சிங் பாதல், பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​யிருப்​ப​தாகக்​ கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT