கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநிலத்தில் 2,200 கி.மீ. நீளமுள்ள எல்லையில் மீதமுள்ள 600 கி.மீ. தூரத்துக்கு வேலி அமைக்கும் பணிகளை வலுப்படுத்துவதற்காக, 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) தலைமை இயக்குநருக்கும், மாநில அரசுக்கும் இடையே அடுத்த சில வாரங்களில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்த முடிவு முறைப் படி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.