காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

 
இந்தியா

“மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருக்கும் அமைச்சர்களை பதவி நீக்கும் மசோதாவை எதிர்ப்போம்” - ஜெய்ராம் ரமேஷ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்​வர்​கள் மற்​றும் அமைச்​சர்​கள் மோச​மான குற்​றங்​களில் ஈடு​பட்டு 30 நாள் காவலில் இருந்​தால், அவர்​களை பதவி நீக்​கம் செய்​யும் மசோ​தாவை மத்​திய அரசு கடந்​தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்தது.

இது பாஜக ஆட்​சி​யில் இல்​லாத மாநிலங்​களில் அரசி​யல் எதிரிகளை தொந்​தரவு செய்​யும் மசோதா என கூறி இதற்கு எதிர்க்​கட்​சிகள் பல எதிர்ப்பு தெரி​வித்​தன. இதனால் இது நாடாளுமன்ற கூட்​டுக் ​குழு பரிசீலனைக்கு அனுப்​பப்​பட்​டது. இந்தக் குழு​வில் பெரும்​பான்மை உறுப்​பினர்​கள் பாஜகவினர். இந்தக் குழு தனது அறிக்​கையை தாக்​கல் செய்து மத்​திய அமைச்சரவை ஒப்​புதல் பெற்ற பின், நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத்​தில் தாக்​கல் செய்​ய​வுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இது குறித்து காங்​கிரஸ் பொதுச்செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் கூறும்போது, "அரசி​யல் எதிரி​களை பழி​வாங்​கு​வதற்​காக, மோசமான குற்​றங்​களில் சிக்​கும் அமைச்​சர்​களை பதவி நீக்​கும் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்​படு​கிறது. இந்​தி​யா​வில் ஒருவர் மீதான குற்​றச்​சாட்டு நீதி​மன்​றத்​தில் நிருபிக்​கப்​படும் வரை அவர் குற்​றமற்​றவ​ராக கருதப்​படு​கிறார்.

மோடி ஆட்​சி​யில் விசா​ரணை அமைப்​பு​கள் எவ்​வாறு செயல்படுகின்றன என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். இதை நாங்கள் எதிர்ப்​போம். நாடாளு​மன்​றத்​தில் சிறப்​புக் கூட்​டத்​தில் ஏற்​கெனவே தோல்​வியடைந்த தொகுதி மறு​வரையறை மசோதாவை குளிர்​கால கூட்​டத்​தில் மீண்​டும் தாக்​கல் செய்ய மத்திய அரசு முயற்​சிக்​கலாம். அதை​யும் நாங்​கள் எதிர்ப்​போம்" என்றார்.

SCROLL FOR NEXT