இந்தியா

தற்சார்பு இந்தியா திட்டம் வேகமெடுக்க வேண்டும்: விமானப் படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கர்வார்: தற்​சார்பு இந்​தியா திட்​டம் வேகமெடுக்க வேண்​டும் என விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் கூறி​யுள்​ளார்.

உள்​நாட்​டில் எச்​ஏஎல் நிறு​வனத்​தால் தயாரிக்​கப்​படும் தேஜஸ் விமானம் திட்​டம் மிக​வும் தாமத​மாகி வரு​வ​தாக விமானப்​படை தளபதி அமர் ப்ரீத் சிங் குற்​றம் சாட்​டி​னார். இந்​நிலை​யில் குறைந்த ஆழத்​தில் இயங்கி நீர்​மூழ்கி கப்​பல்​களை தாக்​கும் திறன் படைத்த ஐஎன்​எஸ் மால்​வன் போர்க்​கப்​பல் கொச்​சின் கப்​பல் கட்​டும் தளத்​தில் உரு​வாக்​கப்​பட்​டது.

இதை கடற்​படை​யில் இணைக்​கும் விழா கர்​நாட​கா​வின் கர்​வாரில் உள்ள ஷீ பேர்ட் கடற்​படை தளத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் விமானப்​படை தளபதி அமர் ப்ரீத் சிங் தலைமை விருந்​தின​ராகக் கலந்து கொண்டு புதிய கப்​பலை நாட்​டுக்கு அர்ப்​பணித்து வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் பேசி​ய​தாவது:

உள் நாட்​டிற்​குள்​ளேயே ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டை மேற்​கொள்​வது அவசி​யம். அது வேக​மாக இருப்​பது முக்​கி​யம். தாமத​மாக உரு​வாகும் தொழில்​நுட்​பம் மறுக்​கப்​பட்ட தொழில்​நுட்​பத்​திற்​குச் சமம். நாம் ஒன்றை உற்​பத்தி செய்து முடிப்​ப​தற்​குள் உலகம் அடுத்த கட்​டத்​திற்​குச் சென்​று​விட்​டால், நாம் செய்த முயற்​சிக்கு எந்த அர்த்​த​மும் இல்​லாமல் போய்​விடும்.

80% உள்நாட்டு பாகங்கள்

ஐஎன்​எஸ் மால்​வன் போர்க்​கப்​பலில் 80 சதவீதம் உள்​நாட்டு உதிரிபாகங்​களைப் பயன்​படுத்​தி​யதற்​காகக் கடற்​படைக்​குப் பாராட்டுக்​கள். இந்​திய விமானப்​படை​யும் இதைப் பின்​பற்ற வேண்​டும். உள்​நாட்டு தொழில்​நுட்​பம் என்ற கோட்​பாட்டை இந்திய கடற்​படை மிக ஆரம்​பத்​தில் இருந்தே செயல்​படுத்தி வருகிறது. இதைப் விமானப்​படை புரிந்​து​கொண்டு செயல்படுத்தச் சிறிது காலம் எடுத்​துக் கொண்​டது. ஏனெனில் வெவ்​வேறு துறை​கள் வளர்ச்சியடைய வெவ்​வேறு கால அவகாசம் தேவைப்​படு​கிறது.

கப்​பல் கட்​டு​வதைப் பொறுத்​தவரை, இந்​தியா எப்​போதும் ஒரு படி முன்​னணி​யில் உள்​ளது. கப்​பல் கட்​டும் துறை​யில் தற்​சார்பு அடைவ​தில் மிகப்​பெரிய முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​திய கடற்​படை​யிடம் இருந்து மற்ற இரண்டு படைகளும் பாடம் கற்​றுக்​கொள்ள வேண்​டும். கப்​பல் கட்​டும் பணி தொடங்​கிய​திலிருந்தே இந்​திய கடற்​படை அதி​காரி​கள் அதில் நேரடி​யாக இணைந்து பணி​யாற்​றுகிறார்​கள்.

அந்த அதி​காரி​கள் அதே துறை​யில் வளர்ந்​து, அக்​கப்​பல் கட்​டும் தளத்​தின் மிக மூத்த அதி​காரி​களாக உரு​வெடுக்​கிறார்​கள். தற்சார்பு என்ற நமது கனவு விரை​வில் நனவாக, இந்​திய வி​மானப்​படை​யும் பாடு​பட வேண்​டும்​. இவ்​வாறு அமர்​ ப்ரீத்​ சிங்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT