இந்தியா

பிஹார் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவம் பார்த்த செக்யூரிட்டி - வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலம், மேற்கு சம்​பரன் மாவட்​டம் பகாகா பகு​தி​யில் அரசு மருத்​து​வ​மனை உள்​ளது. அங்கு வேலை பார்க்​கும் செக்​யூரிட்டி ஒரு​வர், நோயாளி ஒரு​வருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்​படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது.

இந்​தி​யில் வெளி​யான முன்​னா​பாய் எம்​பிபிஎஸ் படத்​தில் நடிகர் சஞ்​சய் தத், தனது தந்​தை​யின் ஆசைக்​காக மருத்​து​வர் போல நடித்​திருந்​தார். அது சினிமா ரசிகர்​களுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனால் செக்​யூரிட்டி செய்த வேலை அதிர்ச்சியை ஏற்​படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “பகாகா மருத்​து​வ​மனைக்கு அருகே நடந்த டெம்​போ, வேன் மோதிக்​கொண்ட விபத்​தில் பலர் காயமடைந்​தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வேனில் காயமடைந்​தவர்​கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அப்​போது, மருத்​து​வ​மனை​யில் போதிய ஊழியர்​கள் இல்​லாததால் அங்​கிருந்த செக்​யூரிட்டி ஒரு​வர் நோயாளி​யின் காயத்தை தையலிட்டு பேண்​டேஜ் வைத்துக்கட்டியுள்​ளார். இதனை அந்த ஆம்​புலன்ஸ் வேன்டிரைவர் வாசிம் அக்​தரும், காயமடைந்த சுரேந்​திர பாசி என்பவரும் தெரி​வித்​துள்​ளனர்” என்றார்.

இது குறித்​து, பகாகா மருத்​து​வ​மனை தரப்​பில் தற்​போது விளக்​கம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. மருத்​து​வ​மனை​யின் துணை கண்காணிப்பாளர் டாக்​டர் அசோக் குமார் திவாரி கூறும்​போது, “இந்த மருத்​து​வ​மனை​யில் போதிய டாக்​டர்​கள், நர்​ஸ்​கள், ஊழியர்​கள் இல்​லை. ஆபரேஷன் தியேட்​டர் உதவி​யாளர்​கள், கட்டுப்​போடும் ஊழியர்​கள் பணி​யிடங்​கள் பல ஆண்​டு​களாக காலி​யாக உள்​ளன.

இருக்​கும் ஊழியர்​களை வைத்து மருத்​து​வ​மனையை நடத்தி வரு​கிறோம். விபத்து நடந்த அன்று காயமடைந்தவர்​கள் வந்​த​போது ஒரு​வருக்கு அதி​க​மாக ரத்​தப்​போக்கு இருந்​தது. இதையடுத்து டாக்​டர் ஒரு​வரின் மேற்பார்வையில்​தான் அவர் தையல் போட்​டார்” என்​றார்.

SCROLL FOR NEXT