டெல்லி செங்கோட்டை

 
இந்தியா

சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஆகஸ்ட் 15 வரை டெல்லி செங்கோட்டை மூடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாட்​டின் 80-வது சுதந்​திர தின பாது​காப்பு ஏற்பாடுகளுக்​காக டெல்லி செங்​கோட்டை நேற்று முன்​தினம் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூடப்​படு​வ​தாக இந்​திய தொல்​பொருள் ஆய்வு துறை வெளியிட்​டுள்ள உத்​தர​வில் தெரிவிக்கப்பட்​டுள்​ளது.

நாட்​டின் 80-வது சுதந்​திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்​படு​கிறது. டெல்​லி​யில் உள்ள செங்​கோட்​டை​யில் பிரதமர் மோடி தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து நாட்டு மக்களுக்கு உரை​யாற்​று​வார். இதற்​காக பிரம்​மாண்ட பாது​காப்பு ஏற்​பாடு​கள் இப்​போதே தொடங்​கி​யுள்​ளன.

டெல்லி செங்​கோட்டை யுனெஸ்கோ பாரம்​பரிய சின்​ன​மாக உள்ள​தால் அது இந்​திய தொல்​பொருள் ஆய்​வுத் துறை​யின் கட்டுப்​பாட்​டில் உள்​ளது. சுதந்​திர​தின கொண்​டாட்​டத்தை முன்னிட்டு ஒவ்​வொரு ஆண்​டும் ஒரு மாதத்​துக்கு முன்​பாக செங்கோட்டை பொது​மக்​களின் பார்​வைக்கு மூடப்​படு​வது வழக்கம்.

அந்த விதி​முறை​கள் படி அடுத்த மாதம் 15ம் தேதி வரை, பொது மக்​களின் பார்​வைக்கு செங்​கோட்டை மூடப்​படு​வ​தாக அறிவிக்கப்​பட்​டுள்​ளது. ஆகஸ்ட் 15ம் தேதி மத்​திய அரசு வழங்​கும் பாஸ் உள்​ளவர்​கள் மட்​டுமே பங்​கேற்​க அனு​ம​திக்​கப்​படுவர்​.

SCROLL FOR NEXT