இந்தியா

பாஜக, அகாலி தளம் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்​சாபில் அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் சட்​டப்​பேரவைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில், 6 ஆண்​டுகளுக்​குப் பிறகு இணைந்து போட்​டி​யிடப் போவ​தாக பாஜகவும், சிரோமணி அகாலி தளம் கட்சியும் கடந்த வாரம் கூட்டாக அறி​வித்​தன.

இந்​நிலை​யில், பாஜக மூத்த தலை​வர்​கள் கேவல் சிங் தில்​லன், சுனில் ஜாக்​கர் மற்​றும் அஷ்வனி சர்மா ஆகியோர், சிரோமனி அகாலி தளம் கட்​சித் தலை​வர் சுக்​பிர் சிங் பாதல் வீட்​டுக்கு நேற்று சென்​றனர்.

இந்த சந்​திப்​பின்​போது, பஞ்​சாபில் உரு​வாகி வரும் அரசி​யல் சூழல் மற்​றும் தேர்​தல் வியூகங்​கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோ​சனை நடை​பெற்​றதாகக் கூறப்​படு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT