மேட்டூர் அணை.

 
இந்தியா

காவிரியில் நீர் திறப்பதை உறுதி செய்யக் கோரும் தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றம் 13-ல் விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​கா​விரி நீர் விவ​காரத்​தில் உச்​ச நீ​தி​மன்றம் வழங்​கிய தீர்ப்​பின்​படி​யும், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்​தர​வின்​படி​யும் கர்​நாடகம் தண்​ணீர் திறப்​பதை உறுதி செய்​யக்​கோரி தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்கு வரும் 13-ம் தேதி விசா​ரணைக்கு வரு​கிறது.

தமிழ்​நாடு - கர்​நாடகா மாநிலத்​திற்கு இடையே காவிரி நதிநீர் பங்​கீடு விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற சட்​டப்​போ​ராட்​டத்​தின் முடி​வாக கடந்த 2018-ம் ஆண்​டில் தமிழகத்​திற்கு 404.25 டி.எம்​.சி நீரும், கர்​நாட​கா​விற்கு 284.75 டி.எம்​.சி நீர் என நிர்​ண​யித்து உச்ச நீ​தி​மன்​றம் இறு​தித்தீர்ப்பை வழங்​கியதுடன், காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்தை அமைக்​க​வும் உத்​தர​விட்​டது. அதன்​படி மத்​திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்தை அமைத்​தது.

இதனையடுத்து, காவிரி​யில் மாதம் தோறும் எவ்​வளவு நீர் வழங்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய அட்​ட​வணை​யின் அடிப்​படை​யில் நீர் வழங்​கப்​பட்டு வந்​தது, ஆனால் அவ்​வப்​போது நீர் பற்​றாக்​குறையை காரணம் காட்டி தமிழகத்​திற்கு வழங்க வேண்​டிய நீரை வழங்​காமல் கர்​நாடகா இழுத்​தடித்​து வந்​தது.

இந்​நிலை​யில், ஜூலை மாதம் தமிழகத்​திற்கு காவிரி​யில் திறந்து விட வேண்​டிய நீரை கர்​நாடகா திறக்​காத நிலை​யில், இது தொடர்​பாக காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​திடம் தமிழக அரசு முறை​யிட்​டது. இதனையடுத்​து, தமிழகத்​திற்கு 15 நாட்​களுக்கு தின​மும் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்​ணீர் திறந்​து​விட கர்​நாடகா​வுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் உத்​தர​விட்​டது.

ஆனால் ஆணை​யம் உத்​தர​விட்​டும், நீர் பற்​றாக்​குறை எனக்​கூறி கர்​நாடக அரசு காவிரி​யில் உரிய அளவு தண்​ணீரை திறந்து விட​வில்​லை. இதைதொடர்ந்​து, கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை தவறாமல் அமல்​படுத்த உத்​தர​விடக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மனு தாக்​கல் செய்​தது.

அதில், ‘காவிரி நீர் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018-ம் ஆண்டு வழங்​கிய தீர்ப்பை பின்​பற்ற கர்நாடகா தவறி​விட்​டது. குறிப்​பாக தமிழகத்​துக்கு ஜூன்​, ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்​களில் நீர் திறக்க கர்​நாடகா மறுத்​தால் காவிரி டெல்டா பகு​தி​யில் வாழும் லட்​சக்​கணக்​கான விவ​சா​யிகள் கடுமை​யாக பாதிக்​கப்​படு​வார்​கள்.

எனவே, தமிழகத்​தின் நலனை பாது​காக்​கும் வகை​யில் உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018-ல் காவிரி நீர் விவ​காரத்​தில் வழங்​கிய தீர்ப்பு மற்​றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்​தரவு ஆகிய​வற்றை எந்த வகை​யிலும் தவறாமல் கடைபிடிக்க கர்​நாடக அரசுக்கு உரிய உத்​தரவை பிறப்​பிக்க வேண்​டும். நடப்பு நீர்ப்​பாசன ஆண்​டில் ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் வரையி​லான கால​கட்​டத்​திற்​கான நீர் பாக்​கியை உடனடி​யாக விடுவிக்க கர்​நாடக​வுக்கு உரிய உத்​தர​வைப் பிறப்​பிக்க வேண்​டும்.

மேலும், நிர்​ண​யிக்​கப்​பட்ட நீர் வெளி​யேற்​றத்தை உறு​தி​செய்​யும் வகை​யில், கர்​நாடகா அணை​களின் நீர்​வரத்தை 10 நாட்​களுக்கு ஒரு​முறை கண்​காணித்​து, கர்​நாட​கா​விற்கு உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​திற்கு உத்​தர​விட வேண்​டும்’ என்று தமிழக அரசு தனது மனு​வில் கோரி​யிருந்​தது.

இந்த மனுவை அவசர வழக்​காக விசா​ரணைக்கு எடுக்​கக்​கோரி தமிழக அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்​.​வைத்​தி​ய​நாதன் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் முன்பு ஆஜராகி முறை​யிட்​டார். குறிப்​பாக தமிழகத்​திற்கு கிடைக்க வேண்​டிய காவிரி நீரில் 22.75 டி.எம்​.சி தண்​ணீர் பற்​றாக்​குறை உள்​ளது. எனவே இந்த மனுவை உடனடி​யாக விசா​ரிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​னார்.

அந்த முறை​யீட்டை ஏற்​றுக்​கொண்ட தலைமை நீதிப​தி, கா​விரி நீர் விவ​காரம் தொடர்​பான தமிழக அரசின் மனு மற்​றும் அது தொடர்​பாக தாக்​கல் செய்​யப்​பட்​டு உள்ள பிற மனுக்​களை​யும்​ வரும்​ 13-ம்​ தேதி வி​சா​ரணைக்​கு எடுப்​ப​தாக உறுதி அளித்​தார்​.

SCROLL FOR NEXT