இந்தியா

பிஹாரில் முதல் முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி இன்று முதல்வராகப் பதவியேற்கிறார்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் முதல்​முறை​யாக பாஜக ஆட்சி அமைய​வுள்​ளது. பாஜக துணை முதல்வர் சாம்​ராட் சவுத்ரி இன்று புதிய முதல்​வ​ராகப் பதவி​யேற்க உள்​ளார்.

பிஹார் சட்​டப்​பேர​வைக்​குக் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் தேர்​தல் நடை​பெற்​றது. அந்​தத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி அமோக வெற்றிபெற்று ஆட்​சி​யைத் தக்​க​வைத்​தது. இதையடுத்து மாநில முதல்​வ​ராக நிதிஷ்கு​மார் 10-வது முறை​யாகப் பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில், பிஹாரில் கடந்த மாதம் நடை​பெற்ற மாநிலங்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்டு முதல்​வர் நிதிஷ்கு​மார் எம்​.பி.​யா​னார். கடந்த 10-ம் தேதி நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அவர் மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார்.

          

இதைத் தொடர்ந்து பிஹார் பாஜக எம்​எல்​ஏ.க்​களின் கூட்​டம் பாட்​னா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் துணை முதல்​வ​ர் சாம்​ராட் சவுத்ரி சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வ​ராக ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார். அவருக்கு நிதிஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

பிஹார் மாநில புதிய முதல்​வ​ராக சாம்​ராட் சவுத்ரி இன்று ஏப்​.15-ம் தேதி பதவி​யேற்க உள்​ளார். இதன்​மூலம் பிஹார் மாநிலத்​தில் முதல் முறை​யாக பாஜக.வைச் சேர்ந்த ஒரு​வர் முதல்​வ​ராக பதவி​யேற்க உள்​ளார்.

இந்​நிலை​யில் ஆளுநர் சையத் அடா ஹஸ்​னைனைச் சந்​தித்து ஆட்​சி​யமைக்க உரிமை கோரி​னார் சாம்​ராட் சவுத்​ரி. அப்​போது தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்​எல்​ஏக்​களின் ஆதர​வுக் கடிதங்​களை​யும் ஆளுநரிடம் சாம்​ராட் வழங்​கி​னார். முன்​ன​தாக முதல்​வர் நிதிஷ்கு​மார் நேற்று ஆளுநர் மாளி​கைக்​குச் சென்று ராஜி​னாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

SCROLL FOR NEXT