சமாஜ்​வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

 
இந்தியா

மேற்கு வங்கம், தமிழக தேர்தல் முடிவால் ஐ-பேக் ஒப்பந்த திட்டத்தை கைவிட்டது சமாஜ்வாதி

செய்திப்பிரிவு

லக்னோ: மேற்கு வங்​கம், தமிழகம் ஆகிய மாநிலங்​களில் ஆட்​சி​யில் இருந்த கட்​சிகள் தோல்​வியை சந்​தித்​த​தால், ஐ-பேக் ஆலோ​சனை நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​யும் திட்​டத்தை சமாஜ்​வாதி கட்சி கைவிட்​டுள்​ளது.

தேர்​தல் வியூ​கம் மற்​றும் பிரச்சா​ரங்​களைத் திட்​ட​மிட இந்​திய அரசி​யல் செயற்​குழு (ஐ-பேக்) என்ற ஆலோ​சனை நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்​கத்​தில் தேர்​தல் வியூ​கங்​களை வகுக்க ஐ-பேக் நிறு​வனத்​துடன் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி ஒப்​பந்​தம் செய்​திருந்​தது.

இந்​நிறு​வனத்​தின் கொல்​கத்தா அலு​வல​கத்​தில், அதன் துணை நிறு​வனர் பிர​திக் ஜெயின் மீதான நிதி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்​கத்துறை சோதனை மேற்​கொண்ட போது, முதல்​வ​ராக இருந்த மம்தா பானர்ஜி ஐ-பேக் அலு​வல​கத்​தில் அதிரடி​யாக உள்ளே புகுந்து ஆவணங்​களை எடுத்​துச் சென்​றார். திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் தேர்​தல் வியூ​கத் திட்​டங்​களை எடுத்​துச் செல்ல அமலாக்​கத் துறை திட்​ட​மிட்டு ரெய்டு நடத்​தி​ய​தாக அவர் குற்​றம் சாட்​டி​னார். தமிழகத்​தில் திமுக.​வும் ஐ-பேக் நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்து தேர்​தல் வியூ​கம் மற்​றும் பிரச்​சார திட்​டங்​களை வகுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

உ.பி.​யில் 2027-ம் ஆண்​டில் சட்​டப்​பேரவை தேர்​தலை சந்​திக்​க​வுள்ள சமாஜ்​வாதி கட்​சி​யும் ஐ-பேக் நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்ய திட்​ட​மிட்​டிருந்​தது. மேற்கு வங்​கம், தமிழகத்​தில் ஆளும் கட்​சிகள் தோல்​வியைச் சந்​தித்​த​தால், ஐ-பேக் நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​யும் திட்​டத்தை சமாஜ்​வாதி கைவிட்​டு, தங்​களின் சொந்த வியூ​கங்​களை வகுக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

SCROLL FOR NEXT