கோப்புப்படம்

 
இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: கே.எஸ்.பைஜுவிடம் விசாரணை

செய்திப்பிரிவு

கொல்லம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடு ஆகியவற்றில் இருந்து தங்கம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான இரு வழக்குகளை கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தங்க கவச வழக்கில் கோயிலின் முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜுவிடம் நேற்று மாலை வரை விசாரணை நடத்த கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் பைஜுவிடம் எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். தங்க கவசங்களை எடுத்துச் செல்ல உன்னி கிருஷ்ணனை அனுமதித்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து பைஜுவிடம் மீண்டும் விசாரித்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில் கதவு நிலைகளில் இருந்து தங்கம் திருடுபோன இரண்டாவது வழக்கில் பைஜுவின் ஜாமீன் மனுவை விஜிலென்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

SCROLL FOR NEXT