இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கை எஸ்ஐடி-யிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

கொல்லம்: சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கம் மாய​மான விவ​காரத்​தில் அறி​வியல்​பூர்வ அறிக்​கையை நீதி​மன்​றம் எஸ்​ஐடி-​யிடம் ஒப்​படைத்​துள்​ளது.

கேரள உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி, விக்​ரம் சாரா​பாய் விண்​வெளி மையம் இந்த அறி​வியல் ஆய்வை மேற்​கொண்​டது. இந்த அறிக்கை ஒரு சீல் வைக்​கப்​பட்ட உறை​யில் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​கப்​பட்​டது. வெள்​ளிக்​கிழமையன்று லஞ்ச ஒழிப்பு நீதி​மன்​றம் இந்த அறிக்​கையை​, சபரிமலை தங்க இழப்பு வழக்கை விசா​ரிக்​கும் சிறப்பு புல​னாய்​வுக் குழு​விடம் ஒப்​படைத்துள்ளது.

2019-ம் ஆண்டு முதன்மை குற்​ற​வாளி​யான உண்​ணி​கிருஷ்ணன் போற்றி என்​பவர், புனரமைப்​புப் பணி​களுக்​காகக் கொண்டு சென்ற செப்​புத் தகடு​களில் இருந்த தங்​கத்​தின் தன்​மை​யை, அதற்கு முன்​பும் பின்​பும் ஒப்​பிட்​டுப் பார்க்க இந்த அறி​வியல் ஆய்​வுக்கு உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​திருந்​தது.

ஐயப்​பன் கோயிலின் துவார​பால​கர் சிலைகள் மற்​றும் கோ​யில் (கரு​வறை) கதவு சட்​டங்​களில் இருந்து தங்​கம் காணா​மல் போனது குறித்து சிறப்பு புல​னாய்​வுக் குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த இரண்டு வழக்​கு​களி​லும் இது​வரை முதன்மை குற்​ற​வாளி உண்​ணி​கிருஷ்ணன் போற்றி மற்​றும் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் போர்​டின் முன்​னாள் தலை​வர்​கள் இரு​வர் உட்பட 12 பேரை போலீ​ஸார்​ கைது செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT