சகோதரன் ஆன்மா அமைதி பெற கயாவில் திதி கொடுத்த ரஷ்ய குடும்பத்தினர்.

 
இந்தியா

உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரருக்கு கயாவில் திதி கொடுத்த குடும்பத்தினர்

செய்திப்பிரிவு

கயா: உக்​ரைன் போரில் கொல்​லப்​பட்ட ரஷ்ய ராணுவ வீரரின் ஆன்மா அமைதி பெற வேண்​டி, அவரது குடும்​பத்​தினர் பிஹாரில் உள்ள கயா​வில் திதி கொடுக்​கும் சடங்கு செய்​தனர்.

இந்​தி​யா​வில் இருந்​தும் வெளி​நாடு​களில் இருந்​தும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தங்​களது முன்​னோர்​களின் ஆன்மா சாந்​தி​யடைய வேண்​டி, பிஹாரின் கயா​வில் உள்ள ஃபல்கு நதிக்​கரைக்கு வந்து திதி கொடுத்து பிரார்த்​தனை செய்​வது வழக்​க​மாக உள்​ளது.

இந்​நிலை​யில், ரஷ்​யா​வைச் சேர்ந்த லலிதா ராதா ராணி ஃபேஸ், அவரது கணவர் சுந்​தரா ஃபேஸ் மற்​றும் அவர்​களது குடும்ப உறுப்​பினர்​கள் இந்​தியா வந்​துள்​ளனர். அவர்​கள் உக்​ரைன் போரில் உயி​ரிழந்த லலி​தா​வின் சகோ​தரர் ஆன்மா அமைதி பெற வேண்​டி, கயா​வின் ஃபல்கு நதிக்​கரை​யில் பாரம்​பரிய ‘பிண்ட தானம்’ (திதி கொடுக்​கும் சடங்​கு) செய்​தனர். அப்​போது அனைத்து பாரம்​பரிய சடங்​கு​களை​யும் நெறி​முறை​களை​யும் முறைப்​படி பின்​பற்றி இந்த வழி​பாட்​டைச் செய்​தனர்.

போரில் தனது மைத்​துனர் இறந்த பிறகு ஒட்​டுமொத்த குடும்​ப​மும் நிலைகுலைந்து போன​தாக சுந்​தரா தெரி​வித்​தார். கயா​வில் முன்​னோர்​களுக்கு திதி கொடுப்​ப​தன் முக்​கி​யத்​து​வம் உலகம் முழு​வதும் அறியப்​பட்​டது என்று குறிப்​பிட்ட அவர், இந்த சடங்கை இங்கு செய்​வதன் மூலம் மறைந்த ஆன்​மாவுக்கு அமைதி கிடைக்​கும் என்று தான் உறு​தி​யாக நம்​புவ​தாக​வும் கூறி​னார்.

SCROLL FOR NEXT