இந்தியா

சரணடைந்த 18 மாவோயிஸ்ட்களுக்கு ரூ.75 லட்சம் உதவித்தொகை

செய்திப்பிரிவு

விஜயவாடா: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் உத்​தரவுப்படி பல்​வேறு மாநிலங்​கள் மாவோயிஸ்ட் ஒழிப்பு நட​வடிக்​கைகளை தீவிரப்​படுத்​தி​ உள்​ளன. அதன் ஒரு பகுதி​யாக வன்முறையை கைவிட்​டுவிட்டு சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்​னிப்பு வழங்கி, போதிய நிதி உதவியும் செய்​யப்​படு​கிறது.

அந்த வகை​யில் ஆந்​திர மாநிலத்​தில் 18 மாவோயிஸ்ட்கள் தாமாக முன்​வந்து காவல்​துறை​யில் சரணடைந்​தனர். அவர்​களுக்கு நேற்று விஜய​வாடா டிஜிபி அலு​வல​கத்​தில் டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா ரூ.75 லட்​சம் நிதி உதவி வழங்​கினார்.

இது குறித்து டிஜிபி கூறுகை​யில்,”கடந்த இரண்​டரை ஆண்​டுகளில் மாவோயிஸ்ட்​களுக்கு எதிராக நடை​பெற்ற துப்​பாக்கிச் சண்​டைகளில் 18 பேர் என்​கவுண்ட்​டர் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் மத்​திய குழு உறுப்​பினர்​கள் 3 பேரும், சிறப்பு மண்​டல குழு உறுப்​பினர்​கள் 3 பேரும் அடங்​கு​வர்.

இது தவிர, சிறப்பு மண்​டல குழு உறுப்​பினர்​கள் 4 பேர் உட்​பட 73 மாவோயிஸ்ட்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சத்​தீஸ்​கர், ஒடிசா மாநில போலீஸ் துறை​யினருக்கு ஆந்​திர மாநில போலீஸ் துறை உதவி செய்​துள்​ளது.

இதன் மூலம் 74 பேர் என்​கவுண்ட்​டர் செய்​யப்​பட்​டுள்​ளனர். சரண் அடைந்த மாவோயிஸ்ட்​கள் மற்​றும் மாவோயிஸ்ட்​கள் வசிக்​கும் பகுதி​களில் உள்ள படித்த இளைஞர்​களுக்​கும் தொழிற்​பயிற்​சிகள் வழங்​கப்​படு​கின்​றன'' என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT