இந்தியா

“ஆண் மேலாதிக்கத்தை ஆதரிப்பவர்கள்” - பாஜகவினரை சாடிய ராகுல் காந்தி

வெற்றி மயிலோன்

புது டெல்லி: ‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பண்பாடற்றவர்கள், சாதியவாதிகள் மற்றும் ஆண்களின் மேலாதிக்கத்தை ஆதரிப்பவர்கள்’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எலிஃபெண்டா குகைகளில் உள்ள, சிவனும் பார்வதியும் ஒன்றிணைந்த வடிவிலான அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் பாதி ஆண், பாதி பெண் வடிவில் இணைக்கும் 'அர்த்தநாரீஸ்வரர்' சிற்பத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், ‘இந்திய ஆன்மீக மற்றும் மத மரபுகளை ஆழமாக ஆராயும்போது, ​​ஒரு விஷயம் தெளிவாகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பண்பாடற்றவர்கள், சாதியவாதிகள் மற்றும் ஆண்களின் மேலாதிக்கத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு நமது ஆன்மீகம் மற்றும் மத மரபுகளைப் பற்றிய புரிதல் துளியும் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதையான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தக வெளியீட்டு விழாவில், "உணவு உண்ணும்போது எனது அம்மா, அப்பாவின் மடியில் அமர்ந்திருந்தார்" என்று ராகுல் காந்தி கூறிய கருத்தை பாஜகவினர் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து அவர் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT