இந்தியா

வாக்​களிக்க ரூ.50 லட்​சம் லஞ்​சம்: கேரளாவில் தீவிர விசா​ரணை

செய்திப்பிரிவு

திரு​வனந்​த​புரம்: கேரள மாநிலம் திருச்​சூர் மாவட்​டத்​தில் உள்ள வடக்​காஞ்​சேரி பஞ்​சா​யத்து தேர்​தலில் ஒரு தரப்புக்கு ஆதர​வாக வாக்​களிக்க சுயேச்சை உறுப்​பினருக்கு ரூ.50 லட்​சம் லஞ்​சம் கொடுக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு குறித்து ஊழல் தடுப்பு பிரிவு விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளது.

வடக்​காஞ்​சேரி பஞ்​சா​யத்​துத் தலை​வர் தேர்​தலில் யுடிஎப் மற்​றும் எல்​டிஎப் ஆகிய இரு கூட்​ட​ணி​யும் தலா ஏழு இடங்​களைப் பெற்று சமநிலை​யில் இருந்​தது. இந்த சூழ்​நிலை​யில், சுயேச்சை உறுப்​பினரின் வாக்​குக்கு மிகுந்த முக்​கி​யத்​து​வம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, முஸ்​லிம் லீக் ஆதரவு பெற்ற சுயேச்சை உறுப்​பினர் இ.யு. ஜாஃபர், அந்த தேர்​தலில் சிபிஎம் வேட்​பாள​ருக்கு ஆதர​வாக வாக்​களிக்க தனக்கு ரூ.50 லட்​சம் வழங்​கப்​பட்​ட​தாகக் கூறும் ஆடியோ இணை​யத்​தில் வேக​மாக பரவியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு அதி​காரி​கள் தற்​போது ஆரம்​பகட்ட விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT