

புதுடெல்லி: அண்டை நாடுகளின் நிறுவனங்கள் இனி இந்திய இடைத்தரகர்களை தவிர்த்து, நேரடியாக ஆன்லைன் நிலக்கரி ஏலங்களில் பங்கேற்கலாம் என்று அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் (சிஐஎல்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிஐஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய விரும்பும் வங்கதேசம், பூடான், நேபாளம் போன்ற அண்டை நாடுகளின் நிறுவனங்கள் இனி நேரடியாக சிஐஎல் நடத்தும் ஒன்றை சாளர முறை (எஸ்டபிள்யுஎம்ஏ) ஏலங்களில் பங்கேற்கலாம். இந்த நடைமுறை 2026 ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
உபரி நிலக்கரி வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும். அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) விதிகளின்படி கட்டண நடைமுறை வெளிப்படையாக இருக்கும்’’ என கூறியுள்ளது.