இந்தியா

வங்கிக் கணக்கில் இருந்து ரூ.29.50 லட்சம் மோசடி: கடற்படை ஓய்வுபெற்ற அதிகாரியின் பேரன் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் இந்​தி​யக் கடற்​படை ஓய்வு​பெற்ற அதிகாரி​யின் வங்​கிக் கணக்​கி​லிருந்து, அவரது 22 வயது பேரனும் நண்​பரும் சேர்ந்து ரூ.29.50 லட்​சத்தை மோசடி செய்து சுற்​றுலா மற்​றும் பார்ட்​டிகளுக்​காக செல​வழித்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது. இச்​சம்​பவம் தொடர்​பாக இரு​வரை​யும் காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ளனர்.

இந்​திய கடற்​படை​யில் அதி​காரியாக பணி​யாற்றி ஓய்வு​பெற்​றவர் ஜெகதீஷ் சிங்(87). இவரது மகன் அஸ்வனி ராகவ், தனது தந்​தையின் வங்​கிக் கணக்​கில் கடந்த ஏப்​ரல் முதல் அக்​டோபர் வரை் சந்​தேகத்​திற்​குரிய வகை​யில் பணம் எடுக்​கப்​பட்​டிருப்​ப​தாகக் காவல் துறை​யில் புகார் அளித்​திருந்​தார். இந்​தப் புகாரின் பேரில் காவல் துறை​யினர் நடத்​திய விசா​ரணை​யில், புகார்​தா​ரரின் மக​னும் ஜெகதீஷ் சிங்​கின் பேரனுமான அபிஷேக் ராகவ் (22) மற்​றும் அவரது நண்​பர் துஷார் சவுத்ரி (22) ஆகியோர் சேர்ந்து பண மோசடி​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது.

முதி​ய​வர் ஜெகதீஷ் சிங்​கின் வங்​கிக் கணக்​குடன் பேரன் அபிஷேக்​கின் மொபைல் எண் இணைக்​கப்​பட்​டிருந்​தது. இதைத்தனக்கு சாதக​மாகப் பயன்​படுத்​திக்​கொண்ட அபிஷேக், தனது தாத்​தாவின் வங்கி விவரங்​களைப் பயன்​படுத்தி நண்​பர் துஷாருடன் சேர்ந்து மொத்​தம் ரூ.29.50 லட்​சத்தை சுருட்​டியுள்ளார். மோசடி செய்​யப்​பட்ட தொகை​யில் ரூ.9.26 லட்​சம் அபிஷேக்​கின் வங்​கிக் கணக்​குக்​கும், மீதமுள்ள ரூ.20.24 லட்​சம் துஷாரின் வங்கிக் கணக்​குக்​கும் மாற்​றப்​பட்​டுள்​ளது. திருடிய பணத்​தைக் கொண்டு இரு​வரும் ஆடம்​பர வாழ்க்கை வாழ்ந்​துள்​ளனர்.

மணாலி, நைனிடால் மற்​றும் ஒடிசா உள்​ளிட்ட பிரபல சுற்​றுலாத் தலங்​களுக்கு உல்​லாசப் பயணம் மேற்​கொண்டு நண்​பர்​களுக்கு பார்ட்டி கொடுத்​துச் செல​வழித்​துள்​ளனர். மேலும், ரூ.2.75 லட்சத்துக்கு ஒரு கார் வாங்​கியதோடு, அதில் இசைக் கருவிகளைப் பொருத்​து​வதற்​காக மட்​டும் கூடுதலாக ரூ.1.25 லட்சம் செலவிட்டுள்​ளனர்.

வங்​கிப் பரிவர்த்​தனைகள் மற்​றும் ஆவணங்​களை ஆய்வு செய்த காவல் துறை​யினர், உத்​தர பிரதேச மாநிலம் புலந்த்​ஷெஹரில் பதுங்​கி​யிருந்த அபிஷேக் ராகவ் மற்​றும் துஷார் சவுத்ரி ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 2 மொபைல் போன்​கள் மற்​றும் மோசடிப் பணத்​தில் வாங்​கப்​பட்ட கார் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. கைதானவர்​களில் அபிஷேக் சட்​டப் படிப்​பும், துஷார் நர்​சிங் படிப்​பும் படித்து வருகின்​றனர். மீதமுள்ள பணத்தை மீட்​கவும், இதில் வேறு யாருக்கும் தொடர்​புள்​ளதா என விசா​ரிக்​கவும் இரு​வரை​யும் போலீஸர் காவலில் எடுத்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT