இந்தியா

மருத்துவரை தாக்கிய நோயாளி உறவினர்கள் 10 பேர் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவர் மச்சிந்த்ரா துக்காராம் (28) அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் விஜயா சிங் (47) என்ற நோயாளி, வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தார்.

அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கோப மடைந்த உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவர் துக்காராமை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் 10 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT