இந்தியா

காஷ்மீரில் 2013-ல் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல் தீவிரவாதிக்கு ‘ரெட் கார்னர்' நோட்டீஸ்

செய்திப்பிரிவு

ஜம்மு: கடந்த 2013-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 4 பாது​காப்​புப் படை வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர். இந்​தத் தாக்​குதலுக்கு முக்​கியக் காரண​மாக இருந்​தவர் இம்​தி​யாஸ் அகமது காண்​டூ. இவர் ஹிஸ்​புல் முஜாகிதீன் தீவிர​வாத அமைப்​பைச் சேர்ந்​தவர்.

இவரைக் கைது செய்ய, இன்​டர்​போலிடம் இருந்து ‘ரெட் கார்​னர் நோட்​டீஸ்’ ஒன்றை எஸ்ஐஏ தற்​போது பெற்​றுள்​ளது. இந்த நோட்​டீஸ், உறுப்பு நாடு​களின் காவல் துறை​யினர் காண்​டூவைக் கண்​டறிய​வும், தடுத்து வைக்​க​வும், இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​த​வும் உதவும். இவர் பாகிஸ்​தானுக்​குத் தப்பிவிட்டதாக நம்​பப்​படு​கிறது.

இந்த வழக்​கு, சோப்​பூர் ஹைகாமில் உள்ள பீர் மொஹல்​லா​வில் 2013-ம் ஆண்டு ஏப்​ரல் 26 அன்று நடந்த தாக்​குதலுடன் தொடர்​புடையது. தானி​யங்கி ஆயுதங்​களு​டன் வந்த தீவிர​வா​தி​கள், காவல் துறை​யினர் மீது தாக்​குதல் நடத்​தினர். இதில் 4 காவல் துறை​யினர் கொல்​லப்​பட்​டனர்.

வழக்கு முதலில் தர்சூ காவல் நிலை​யத்​தில் பதி​வானது. பின்​னர் 2024-ல் விரி​வான விசா​ரணைக்​காக எஸ்​ஐஏவுக்கு மாற்​றப்​பட்​டது. புதிய ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில், 2024 ஜூலை​யில் 6 பேருக்கு எதி​ராக குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் 2 பேர் என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டனர். 3 பேர் கைது செய்​யப்​பட்டனர்.

SCROLL FOR NEXT