இந்தியா

ஆயுஷ்மான் பாரத் நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டில் உள்ள ஏழை மக்​கள் மற்​றும் 70 வயதுக்கு மேற்​பட்ட அனை​வரும் பயன்​பெறும் வகை​யில் ஆயுஷ்​மான் பாரத் மருத்​துவ காப்​பீடு திட்​டத்தை மத்​திய அரசு கொண்டு வந்தது. இத்​திட்​டத்​தின் கீழ் பயனாளி​கள் ரூ.5 லட்​சம் வரை உயர் மருத்துவமனை​களில் இலவச​ சிகிச்சை பெற முடி​யும்.

இத்​திட்​டத்​தின் கீழ் இது​வரை 43 கோடி பேருக்கு அடை​யாள அட்டைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இத்​திட்​டத்​தின் கீழ் இது​வரை ரூ.1.6 லட்​சம் கோடி மதிப்​பிலான சிகிச்​சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்​நிலை​யில் ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்தை நாடாளு​மன்ற நிலைக் ​குழு ஆய்வு செய்து தனது 172-வது அறிக்​கையை சமர்ப்பித்​துள்​ளது. அதில் ஆயுஷ்​மான் பாரத் காப்​பீடு திட்​டத்​தின் நிதியை ரூ.10 லட்​ச​மாக உயர்த்த பரிந்​துரை செய்​துள்​ளது.

SCROLL FOR NEXT