இந்தியா

திருப்பதி தேவஸ்தான முழு நேர நிர்வாக அதிகாரியாக ரவிசந்திரா பதவியேற்பு

செய்திப்பிரிவு

திருமலை: திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ஆட்சி காலத்​தில் நடந்​த​ கலப்பட நெய் விவ​காரத்தில் சம்​மந்​தப்​பட்​ட​வர்​கள் மீது அரசு நடவடிக்கை எடுக்​கலாம் என ஆந்​திர அரசுக்கு சிபிஐ விசா​ரணை குழு பரிந்​துரை செய்​தது. அதன்​பேரில், தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் இடமாற்​றம் செய்​யப்​பட்​டார்.

          

இவரை தொடர்ந்​து, முதல்​வர் அலு​வல​கத்​தில் முக்​கிய பொறுப்​பில் இருந்த ஐஏஎஸ் அதி​காரி ரவிசந்​தி​ராவை அரசு தற்​காலிக நிர்​வாக அதி​காரி​யாக நியமனம் செய்​தது. சமீபத்​தில் அவரை நிரந்தர நிர்​வாக அதி​காரி​யாக பணி நியமனம் செய்து உத்​தர​விட்​டது.

அதன்​பேரில் நேற்று காலை 7.44 மணிக்கு ஏழு​மலை​யான் கோயி​லில் பதவி பொறுப்​பேற்​றார். முன்​ன​தாக ரவிசந்​திரா தம்​ப​தி​யினர் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தனர். அவர்​களுக்கு தேவஸ்​தானம் சார்​பில் கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி தீர்த்த பிர​சாதங்​கள், மற்​றும் சுவாமி​யின் திரு உரு​வப்​படத்​தை​யும்​ வழங்​கி கவுர​வித்​தார்​.

SCROLL FOR NEXT