இந்தியா

லக்னோவில் தேசிய உத்வேக தலம்: பிரதமர் மோடி இன்று திறக்கிறார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்​னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்ற தலை​வரு​மான அடல் பிஹாரி வாஜ்​பா​யின் 101-வது பிறந்த நாளை முன்​னிட்​டு, பிரதமர் மோடி இன்​று உத்​தரப் பிரதேச மாநிலம் லக்னோ செல்​கிறார்.

பிற்​பகல் 2:30 மணி​யள​வில் முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் வாழ்க்கை மற்​றும் லட்​சி​யங்​களை போற்​றும் வகை​யில் லக்​னோ​வில் ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ (தேசிய உத்​வேக தலம்) வளாகத்தை திறந்து வைத்​து உரை​யாற்​றுகிறார்.

சுமார் ரூ.230 கோடி செல​வில், 65 ஏக்​கர் பரப்​பள​வில் இந்த வளாகம் கட்​டப்​பட்​டுள்​ளது. சுமார் 98,000 சதுர அடி பரப்​பள​வில், தாமரை வடி​வில் வடிவ​மைக்​கப்​பட்ட அதிநவீன அருங்​காட்​சி​யக​மும் இங்கு அமைந்​துள்​ளது. டிஜிட்டல் மற்றும் அதிநவீன தொழில்​நுட்​பங்​கள் மூலம் தலை​வர்​களின் பங்​களிப்​பு​களை இந்த அருங்​காட்​சி​யகம் காட்​சிப்​படுத்​துகிறது.

SCROLL FOR NEXT