விஎச்பி.யின் சர்வதேச தலைவர் அலோக் குமார்
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு நடைபெற்றதாக பல புகார்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து விஎச்பி.யின் சர்வதேச தலைவர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆதாயத்துக்காக ராமர் பெயரைப் பயன்படுத்துவோரை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். உ.பி.யின் 2027 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறவே ராமர் கோயில் காணிக்கை விவகாரத்தை அகிலேஷ் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். அவர் எஸ்ஐடி முன் ஆஜராகி ஆதாரங்களை வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில், ‘ராமாலயா அறக்கட்டளை' என்ற அமைப்பும் செயல்பட்டது. அது தங்கக் கோயில் கட்டுவதாக கூறி ஒவ்வொரு இந்து வையும் 10 கிராம் தங்கம் வழங்க கேட்டுக்கொண்டது. இந்த அறக்கட்டளை கோயில் கட்டாதது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். துரோகமோ அல்லது அலட்சியமோ, குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி, மிகக் கடுமையான தண்டனையைப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராமர் கோயில் காணிக்கை திருட்டு தொடர்பாக அமைப்பட்ட எஸ்ஐடி குழு தனது முதற்கட்ட அறிக்கையை உ.பி. முதல்வர் ஆதித்ய நாத்திடம் நேற்று சமர்ப்பித்தது.