இந்தியா

ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக்கக் கோரிய வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராமேஸ்​வரத்​துக்​கும், இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாருக்​கும் இடையே ராமர் பாலம் இருந்​த​தாக நம்​பப்​படு​கிறது. இதை தேசிய பாரம்​பரிய நினைவுச் சின்​ன​மாக அறிவிக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி பாஜக மூத்த தலை​வர் சுப்​பிரமணி​யன் சுவாமி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இதுதொடர்பாக மத்​திய அரசு எந்த நடவடிக்​கையும் எடுக்​க​வில்லை என்று கூறி உச்ச நீதி​மன்​றத்​தில் சுப்​பிரமணி​யன் சுவாமி புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்​கல் செய்து உரிய உத்​தரவு பிறப்​பிக்க கோரி​யிருந்​தார். அந்த மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், மத்​திய அரசு பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​திருந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது வழக்​கறிஞர் ஒரு​வர் ஆஜராகி, “இந்த வழக்​கில் மனு​தா​ரர் சுப்​பிரமணி​யன் சுவாமி தானே ஆஜராகி வாதிடு​வ​தாக இருந்​தது, அவருக்கு தற்​போது உடல்​நிலை சரி​யில்​லாத​தால் நீதி​மன்​றம் வர இயல​வில்​லை. எனவே வழக்கை ஒத்​திவைக்க வேண்​டும்” என்​றார். இதை ஏற்​றுக்​கொண்ட நீதிப​தி​கள் வழக்​கை 4 வார காலத்​துக்​கு ஒத்​திவைத்​தனர்​.

SCROLL FOR NEXT