இந்தியா

ம.பி. மாநிலங்களவை இடைத்தேர்தல்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி போட்டியின்றி தேர்வு

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய இணை​யமைச்​ச​ராக பதவி வகித்து வந்த எல்​.​முரு​கன், கடந்த அக்​டோபர் 13-ம் தேதி தனது அமைச்​சர் பதவி மற்றும் எம்​பி. பதவியை ராஜி​னாமா செய்​தார்.

மத்​திய பிரதேசத்​தில் இருந்து மாநிலங்​களவை எம்​பி.​யாக பதவிவகித்து வந்த எல்​.​முரு​க​னின் பதவிக் காலம், 2030-ம் ஆண்டு ஏப்​ரல் 2-ம் தேதி வரை இருந்த நிலை​யில் அவர் தனது ராஜினாமாவை அறி​வித்தார்.

இதனால் காலி​யான மாநிலங்களவை எம்​பி. பதவிக்கு நவம்​பர் 12-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இந்​தத் தேர்​தலில் ஆளும் பாஜக சார்பில் மத்​திய அமைச்சர் ஹர்​தீப் சிங் புரி வேட்​பு மனுவை தாக்​கல் செய்​தார். அவரைத் தவிர ராஜ்கு​மார் லோஹானி, கண்டே சயன்னா ஆகிய இரு சுயேச்சை வேட்​பாளர்​களும் வேட்பு மனு தாக்​கல் செய்​தனர்.

கடந்த செவ்​வாய்க்​கிழமை நடந்த வேட்​புமனு பரிசீலனை​யின்​போது, இரு சுயேச்சை வேட்பாளர்​களின் வேட்​புமனுக்​கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து புரி​யின் வேட்பு மனு மட்​டுமே ஏற்​றுக் கொள்​ளப்​பட்​ட​தால் அவர் போட்​டி​யின்றி தேர்​வா​னார். இந்நிலை​யில், வேட்​புமனுக்​களைத் திரும்​பப் பெறு​வதற்​கான காலக்​கெடு நேற்று பிற்​பகல் 3 மணிக்கு முடிவடைந்​ததை அடுத்து, புரியின் வெற்றி அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT