இந்தியா

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளிப்பது மோடி சமரசத்தின் விளைவு: ராகுல் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈ​ரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதல் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா 30 நாட்களுக்கு கச்சா எண்​ணெய் வாங்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனு​மதி வழங்​கி​யுள்​ளார்.

இதை விமர்​சித்து மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: நமது மக்​கள் விருப்​பப்​படி உரு​வாவது​தான் இந்​திய வெளி​யுறவுக் கொள்​கை. அது நமது வரலாறு, புவி​யியல், சத்​யம் மற்​றும் அகிம்சை போன்ற நமது ஆன்​மீக நெறி​முறை​கள் அடிப்​படை​யில் இருக்க வேண்​டும். ஆனால் நாம் தற்​போது காண்​பது கொள்கை அல்ல. தனி​நபரின் சமரச கொள்​கை​யால் ஏற்​பட்ட விளைவு. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​யுள்​ளார்.

          

இந்​தி​யா​வின் வர்த்தக கொள்​கையை அமெரிக்​கா​ தான் முடிவு செய்​யும் என ராகுல் காந்தி நாடாளு​மன்​றத்​தில் முன்பே பேசிய வீடியோவை​யும், இத்​தகவலுடன் இணைத்து ராகுல் காந்தி வெளி​யிட்​டுள்​ளார். காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் வெளி​யிட்​டுள்ள தகவலில், ‘‘அமெரிக்​கா​வின் பிளாக்​மெ​யில் எவ்​வளவு ​காலம்​ தொடரும்​?’’ என கேள்​வி எழுப்​பியுள்​ளார்​.

SCROLL FOR NEXT